முஸ்லிம்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது, பொதுபல சேனாவே காரணம் - அமைச்சர் வாசு
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது ஆளும் கட்சிக்கான சிறுபான்மை மக்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.
தேசிய மொழிகள் அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் இந்த பின்னடைவிற்கு முக்கியமான காரணியாக அமைந்துள்ளது.
வறட்சியைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை ஆத்திரமூட்ட வைக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்தது. இவ்வாறான ஓர் நிலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தமை வரவேற்கப்பட வேண்டியதாகும். எனினும், சிறுபான்மை மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கத் தவறியுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளே பிரதான காரணியாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகளையே ஜே.வி.பி பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த கால மாகாணசபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காணப்படும் பிரபல்யம் ஆகியவற்றை கருத்திற்கொண்டால், ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றியீட்ட முடியும்.
எனினும் ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வரவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அதற்கு ஆதரவளிக்கப்படும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பெளத்தர்களின் ஆதரவே வீழ்ச்சியடைந்து விட்டது இதிலென்ன முஸ்லிம்கள். மக்களை ஏமாற்றுகின்றோம் எண்ற எண்னத்தில் அரசியல்வாதிகளே ஏமான்று நிற்கும் நிலை படுகேவலம். மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள்.
ReplyDelete