முஸ்லிம்கள் என்னை முழுமையாக நம்பலாம் - முஸ்லிம் நாடுகள் அனைத்தும் எமது நேசநாடுகளே - மஹிந்த
முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் எமது நேசநாடுகளே! நான் உங்களை நம்புகிறேன், நீங்களும் என்னை முழுமையாக நம்பலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்த ஜனாதிபதி, அனைத்து மக்களும் எமது சகோதரர்களே சகலரும் சம உரிமையோடும் சுய கெளரவத்தோடும் சம அந்தஸ்தோடும் வாழ்வதே எமது விருப்பம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மன்னர் காலந்தொட்டு எமக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு தொடர்கிறது. இந்த உறவை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி; தவறான வழியில் செல்லவேண்டாம், பொய்ப்பிரசாரங்களை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மொனராகலை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பொன்று மொனராகலை நகரில் நடைபெற்றது.
அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சுமேதா ஜயசேன பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், மாத்தளை மாநகர மேயர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
மொனராகலை வாழ் முஸ்லிம் மக்களை நேரடியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் எனது சகோதரர்கள். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் எமது சகோதர மக்களே. இதை எவரும் மறுக்க முடியாது.
எமது உறவை இல்லாதொழிக்க சில மோசமான சக்திகள் முயற்சிக்கின்றன. எனினும் நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை.
நீங்கள் ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம். பயம்கொள்ளவும் வேண்டாம். நான் உங்களின் சகோதரன். நான் உங்கள் நண்பன். சொந்தக்காரன்! நான் உங்களைப் பாதுகாப்பேன். அது எனது கடமை.
நீங்கள் என்னை நம்பவும். நானும் உங்களை நம்புகிறேன். தவறான வழியில் செல்ல வேண்டாம். பொய்ப்பிரசாரங்களை நம்பவேண்டாம். நாம் எல்லோரும் ஒன்று படுவோம்.
வானெலியில் ஒரு நாளில் ஐந்து தடவைகள் ‘பாங்கு’ சொல்ல நாமே வழிவகுத்தோம். பல வருடகாலம் பின்தங்கிய அபிவிருத்திப் பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். எதிர்காலத்திலும் மென்மேலும் செய்வோம்.
மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை முஸ்லிம் பாடசாலைகளிலும் ஏற்படுத்தி வருகிறோம். பிள்ளைகள் தான் உங்கள் செல்வம் நாட்டின் செல்வம்.
பலஸ்தீன மக்களுக்காக நாம் ஆதரவளித்துள்ளோம். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் எமது நேச நாடுகளே.
சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவையே இஸ்லாமிய மதத்தின் அத்திவாரம். இந்த நாட்டில் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும். அனைத்து மக்களும் சம உரிமையோடும் சுய கெளரவத்தோடும் வாழவேண்டும். அதுவே எமது விருப்பம்.
நாடும் உங்கள் பிள்ளைகளும் முன்னேற வேண்டும். உங்கள் பிரதேசம் முன்னேறவேண்டும். உங்கள் வாழ்விலும் முன்னேற்றம்வேண்டும். அதுவே முக்கியம்.
வெற்றிலைச் சின்னத்தை மறக்கவேண்டாம் வெற்றிலையின் வெற்றி உங்கள் வெற்றி உங்கள் பிள்ளைகளினதும் வெற்றி. உங்கள் எதிர்காலத்தின் வெற்றி. வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சி... மகிந்தவின் பேச்சி தேர்தல் முடிஞ்சாப் போச்சி...
ReplyDeleteMr. President please implement the law and order for all community and individual as well and be honest, don't think that others are fools.
முஸ்லிம்களின் மறுசுக்காட்டி முல்லிக்குளம் 300 ஏக்கர் பரம்பரை காணி ..பள்ளிவாசல் கிணறு ஹபுரடி ..எல்லாம் .அதில் உள்ளது ... சால்வை மண்தோண்டி மாலை தீவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் 70 அடி வரையும் தோண்டியாகி விட்டது ...அதில் கோடிக்கணக்கான ரூபாயை ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள் ..அதேபோல தமிழர்கள் ஆயிரம் வருட 700 வருட வாழ்ந்த காணி யும் இங்குதான் உள்ளது .....இதில் கள்ளன் எல்லாம் பங்கடி .அடிக்கிறார்கள் ...அதைப்பற்றி ஒருவரும் மூச்சும் விடமாட்டார்கள் ... ...ஆனால் விழ்பது காட்டுக்குள் ..சம்பந்தி சண்டை நடந்து கொண்டே இருக்கும் .......யாரைடா ஏமாத்ுறீர்கள்....... உங்களுக்கு அல்லாஹ்வை ஏமாற்றக் கிடைக்காது
ReplyDeleteThe president did not take any action against the BBS until now killed the muslim by the BBS but how he is cheating by his speach.all drama
ReplyDeleteநான் ஏற்கனவே சொன்னேனல்லவா? இப்படி பேச்சுகள் தேர்தல் காலங்களில் வருமென்று. யார் வென்றாலும் தோற்றாலும் நமது வாக்குகளை இதுபோன்ற கொடும்பாவிகளுக்கு போடக்கூடாது நமக்கு செய்த அனியாயங்களை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அனைத்தும் பொய். நம்பவேண்டாம். உங்களை மடையனாக்கும் தந்திரமே இது.
ReplyDeleteகோன் எவ் வழியோ குடி அவ்வழி. மேன்மைமிகு ?? சனாதிபதியே முழுப் பூசணிக்காயை மறைத்தால், மற்றவர்கள் பற்றி செல்லவும் வேண்டுமோ
ReplyDelete