போர் வெற்றி கொள்ளப்பட்டமையே தேர்தல் வெற்றிக்கான காரணம் - கோத்தபாய
போர் வெற்றி கொள்ளப்பட்டமையே தேர்தல் வெற்றிக்கான காரணம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் தேர்தலுக்கு முன்னதாக கண்ட அனைத்து கனவுக்களம் சிதைந்து போயுள்ளது. ஊவா தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்தியிருந்தார்.
எனினும் அந்த வழிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நாட்டு மக்கள் போர் பீதியில் வாழ்ந்து வந்தனர். போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த எந்தவொரு அரசாங்கத்திற்கும் முடியவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை முற்று முழுதாக நிறுத்தினார். மக்கள் இதனை மறக்கவில்லை. இவ்வாறான தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றியடைவதற்கான காரணம் போர் வெற்றிகொள்ளப்பட்டமையும் அபிவிருத்தியுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment