Header Ads



துருக்கிய ஜனாதிபதி எர்துகானின் மற்றுமொரு அதிரடி...!

துருக்கியில் பாடசாலை மாணவர்கள் உடலில் பச்சை குத்திக் கொள்வது மற்றும் அலங்கார துளைகளை இடுவதற்கு அந்நாட் டின் இஸ்லாமிய பின்னணி கொண்ட அரசு தடை விதித்துள் ளது.

துருக்கியில் பழைமைவாதிகள் பச்சை குத்திக்கொள்வதை அவ மரியாதையாக கருதுகின்றபோதும் அங்கு நகர்புற மதச்சார்பற்ற சமூகத்தில் இந்த செயல் நாகரீகமாக பின்பற்றப்படுகிறது. இது பாடசாலை வயது இளைஞர்களிடமும் பிரபலமானது.

துருக்கியில் ஜனாதிபதி ரிசப் தய்யிப் எர்துகானின் அரசு கடைபிடித்துவரும் கொள்கைகள் குறித்து சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அண்மையில் உயர் பாடசாலைகளில் பெண்களுக்கு ஹிஜhப் அணிய அரசு அனுமதி அளித்தது விமர்சனத்திற்கு உள்ளானது.

இதில் மாணவர்கள் பச்சை குத்துவதற்கான தடை துருக்கியின் உத்தியோக பு+ர்வ வர்த்தமானி அறிவிப்பில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தலைக்கு சாயம் பு+சுவது மற்றும் ஒப்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

துருக்கியின் பாரம்பரி கலாசாரத்தை பாதுகாக்க ஜனாதிபதி எர்துகான் முயற்சிப்பதாக குறிப்பிடப்பட்டபோதும் அவர் நாட்டை இஸ்லாமிய மயப்படுத்தி வருவதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எர்துகான் அண்மையில் உடலில் பச்சை குத்திய கால்பந்து வீரர் ஒருவருக்கு வழங்கிய அறிவுரையில், 'இதில் என்ன பச்சை குத்தப்பட்டிருக்கிறது? ஏன் உங்கள் உடலுக்கு தீங்கு செய்கிறீர்கள்? வெளிநாட்டினர் போல் முட்டாளாக வேண்டாம். இறைவன் இதனை தடை செய்திருக்கிறான், எதிர் காலத்தில் இது உங்களுக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

1 comment:

  1. masha allah real muslim leader,,,all stupid gulf mannan koottam iwara munmaaziriya adukkanum.. iwarukku nenda ayulaium islathula uruziaum allh kidukkanum,,, amin

    ReplyDelete

Powered by Blogger.