Header Ads



‘’அண்ணன் எப்போ சாவான், தின்னை எப்போது காலியாகும்...?

ஊவா மாகாணசபை தேர்தல் முடிவை, மலையக தமிழர்கள் தீர்மானித்து விட்டார்கள் என்கின்ற செய்தியை விட, முஸ்லிம் கூட்டமைப்பு ஆசனம் எதையும் பெற்றுக்கொள்ளாத விடயத்தை தூக்கிப்பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனம் என நம்மில் எத்தனை பேர் விளங்கி இருகிறோமோ தெரியாது. ஆனால், எனக்கு நம்மை போன்ற இன்னும் ஒரு சிறுபான்மை இனம்  – மலையக தமிழர்கள் – ஊவா மாகாணசபை ஆட்சியை தீர்மானித்து, மிகப்பெரும் செய்தி சொல்லி இருப்பது, மிகவும் மகிழ்ச்சி தருகிறது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

நடந்து முடிந்த ஊவா மாகாணசபை தேர்தலில், அரசாங்க அணியினர் பெற்றுக்கொண்ட வாக்குகள் 3,40,000. எதிரணி பெற்றுக்கொண்ட வாக்குகள் [ UNP/JVP ] 3,00,000. எனின், இரண்டுக்கும் நடுவில் மிகுதியாக எஞ்சியிருப்பது வெறும் 40,000 [3,40,000-3,00,000=40,000] வாக்குகள்தான். செந்தில் தொண்டமான் பெற்ற விருப்பு வாக்குகள் 31,000. அப்படியாயின், ஆகக்குறைந்தது 40,000 மலையக தமிழர்களாவது தங்களது வாக்குகளை அரசாங்க அணிக்கு வழங்கி இருக்கிறார்கள் என்பதை மிக இலகுவாக ஊகிக்கமுடியும். 

எனவே, முஸ்லிம் கூட்டமைப்பு சாதிக்க நினைத்த, முஸ்லிம்களை ஒன்றிணைத்து, எதிர்வரும் தேசிய மட்ட [ நாடாளுமன்றம் / ஜனாதிபதி ] தேர்தல்களில், முஸ்லிம்களின் பக்கம் கவனத்தை ஈர்ப்பது என்ற கருப்பொருளை, முஸ்லிம்களை விட மலையக தமிழர்கள் மிகச்சரியாக உணர்ந்துள்ளனர் என்பதை நாம் விளங்கிகொள்ளலாம். அதனுடாக, ஊவா மாகாண மலையக தமிழர்கள் இல்லாமல், ஊவா மாகாணத்தை யாரும் வெல்ல முடியாது என்ற செய்தியை முழு இலங்கைக்கும் மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள். இதனோடு சேர்த்து, ஏனைய மாகாணம்களிலுமுள்ள இவர்களின் வாக்கு பலம், தேசிய மட்ட தேர்தல்களில், ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக திரட்சிபெற்றிருப்பது அவர்கள் பக்கம் நிட்சயம் கவன ஈர்ப்புபை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.   

இந்த இலக்கை சாதிக்க நாடித்தான் ஊவாவில் முஸ்லிம் கூட்டமைப்பு களமிறங்கியது. எனினும், ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கான முதற்கட்ட முயற்சியாக பார்க்கப்பட்ட இந்தத்தேர்தலில், அவ்வாட்சி மாற்றத்தைக் கொண்டுவர முஸ்லிம் கூட்டமைப்பு ஒரு தெரிவல்ல எனவும், அதற்கு பெரும்பான்மை கட்சி ஒன்றே பொருத்தமானது எனவும் கருதியதால், அக்கட்சிகளின் பக்கமே முஸ்லிம்களில் பெரும்பகுதியினரும் நாட்டம் காட்டினர். இதனால், முஸ்லிம் கூட்டமைப்பு ஆசனம் பெறுமளவு வாக்குகளை சேகரிக்க முடியவில்லை. இருப்பினும், கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விடவும் ஏறத்தாழ ஆயிரம் வாக்குகள் அதிகமாகவே கிடைத்துள்ளது.

இவ்வாறு, முஸ்லிம் கூட்டமைப்பு ஆசனத்தை பெறமுடியாமைக்கு தடையாக இருந்த காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமலும், முன்பு கிடைத்த வாக்குகளை விட ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதையும் மறைத்து, முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளும் சமூக தலைமைகளும் ஒன்றுசேருவதற்கான பரிசார்த்த முயற்சி பின்னடைவு கண்டிருப்பதை, வஞ்சக நோக்கத்தோடு விமர்சிப்பது வெறுக்கத்தக்கதும் கீழ்த்தரமான அரசியல் நோக்கம் கொண்டதுமாகும்.

மேலும், ஊவாவில் முஸ்லிம்களால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையோ அல்லது உள்ளூராட்சி மன்ற தலைவரையோ பெறமுடியாது. அவர்களால் பெறக்கூடிய ஒரே ஒரு அதிகாரம் மாகாணசபை உறுப்பினர் மட்டும்தான். அதையும் இன்று அவர்கள் இழந்து நிற்கின்றனர். ஒழுங்கான குடிநீர் வசதி இல்லை, தரமான கல்வி இல்லை, அரசாங்க தொழில்களில் புறகணிப்பு, இருக்கின்ற நிலத்திற்கு முறையான ஆவணமில்லை, இளைஞ்சர்கள் மூட்டை தூக்குகின்றனர், ஒழுங்கான பாதைகள் இல்லை என அடிக்கிக்கொண்டே  போகக்கூடிய, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளுக்காக முன்னிற்க யாருமே இல்லை. இனியும் இருக்க போவதில்லை என எண்ணும்போது மனசு கனக்கிறது. அவர்களுக்காக பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை. மொத்தத்தில் ஊவா மாகாண சபை தேர்தலில் தோற்றது, அங்குள்ள முஸ்லிம்கள்தான்.   

நிலைமை இப்படி இருக்க, ‘’அண்ணன் எப்போ சாவான் ; தின்னை எப்போது காலியாகும்’’ என்பதை போன்று, இந்தக்கூட்டணி எப்போது தோற்கும் என்று காத்திருந்து கருவருப்பதை போன்று விமர்சிப்பது, அரசியலுக்காக எதையும் செய்ய, சொல்ல துணிந்த மனித குணங்களின் வெளிப்பாடாகவே என்னால் பார்க்க முடிகிறது. என மேலும் தெரிவித்தார்
       

3 comments:

  1. சமூக அக்கறை இல்லாத முஸ்லிம் பிரதினியை விட ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள பிரதினி எவ்வளோவோ மேல் என்பதை ஊவா மக்கள் நன்றாக புரிந்திருக்கிறார்கள்.... அவர்கள் முஸ்லிம் கூட்டனிக்கு வாக்களித்து மகிந்தவின் இனவாத அரசை பலப்படுத்த விரும்பவில்லை....

    ReplyDelete
  2. Shame on you and the party Mr. Thawam. You blame the innocent public while your party leader shamelessly licking the shoes of Mahinda Rajapakse. Don't your so called "Muslim" Islamic party have a sense to read the pulse of Sri Lankan Muslims?
    It is very unfortunate of the Sri Lankan Muslims to have a party like yours and a leaders and members supporting your leaders blindfolded.
    Don't you and the party see the intensity of violence this government has been applying on Muslims?
    And you expect us to support your party while you are in a blind surrender state with the same government....
    Shame on your party and the leader....
    How it is logical for you to think that we would still support you?
    And most importantly, keep in mind that, WE ARE NOT EASTERN MUSLIMS...

    ReplyDelete

Powered by Blogger.