முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போக, ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் - ஆசாத் சாலி
எதிரணிக் கட்சி யாவும் வீதிக்கு இறங்கி சகல ஆணைக்குழுக்களையும் நியமிக்குமாறு போராட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆசாத் சாலி குறிப்பிட்டார்
கொழும்பில் இன்று 24.09.2014 நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் குறிபபிடுகையில்,
ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் சகல வளங்களையும் பாவித்தும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நிலைமை மாறியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறும் பாதைக்குப் பிரவேசிக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நேற்று எடுத்த தீரமானத்தை வரவேற்கின்றோம். இது முக்கியமான தீர்மானமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச மற்றும் உபா தலைவர்களாக ரவி கருணாயநாக்க , அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் நியமிக்கபடப்டுள்ளதுடன் ஹரீன் பெர்னாந்டோ தலதா அத்துகோரளை அகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே மக்களின் தேவையுமாக இருந்து வந்தது.
ஐக்கிய தேசிய கட்சி மௌனமாக இருக்கும் போது மக்கள் மக்கள் மாற்றுவழிகளைத் தேடினர். இத்தகைய மாற்றுவழியாகத் தான் பொன்சேகாவின் கட்சி வெற்றி பெற்றது. மேல் , தென் மாகாண சபைகளில் பொன்சேகாவின் கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பதிலாக மாற்றுக்கட்சிகளைத் தேடியதே காரணமாகும். ஐக்கிய தேசிய கட்சி ஒன்றுபடும் போது பொன்சேகாவின் கட்சியில் ஒருவர் கூட ஊவா மாகாண சபையில் வெற்றி பெறவில்லை. சரத் பொன்சேகா தனது குண்டுபட்ட வாகனத்தை தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் காட்டி வாக்குகளைக் கேட்டார். ஆனால் மக்கள் அவரின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி ஒன்றுபடுமாறு ரணில் விக்கிரமசிங்க கூறியதால் மக்கள் ஒன்றுபட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்துள்ளதாக அமைச்சர் மகிந்த யாப்பா அபேகுணவர்தன கூறிகின்றார். மக்கள் ஒன்றுபட்டால் அரசாங்கத்தை விரட்டி அடிக்க முடியும். இதை ஊவா மாகாணத்தில் காண முடிந்தது. அரசு 5000 தண்ணீர் போத்தல்களை விநியோகித்து விகாரைகளுக்கு செல்வோருக்கு சில உடுப்புக்களை விநியோகித்து வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளைக் கேட்டும் மேலதிகமாக இரண்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
எதிர்க்கட்சிக்ள சற்று கூடுதலாக உழைத்திருந்தால்; இன்னுமொரு ஆசனத்தை பதுளையில் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும். பதுளையில் ரிசாத் ஹக்கீம் தனித்து போட்டியிட்டதால் அரசாங்கம் முஸ்லிம் வேட்பாளர்களை போட்டிக்கு நிறுத்தவில்லை. இதை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா , பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அகியோர் கூறினர். இத்தேர்தலில் ஊவாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. ஊவாவுக்கு போனதாகவும் உலமாக்களுடனும் ஜம்இய்துல் உலமாவுடனும் கதைத்ததாக ஹக்கீம் கூறுகின்றார். ஆனால் இவர்களுக்கு கிடைத்தது 5000 வாக்குகள் மட்டுமாகும். கிடைத்தது.
மத்திய மாகாணத்தில் ஆளும் கட்சியில் வெற்றி பெற முடியாது என்பதால் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸில் கேட்டு வெறிற பெற்றார். இவர் ஏற்கனவே பிரதேச சபையின் தலைவராக ஆளும் கட்சியில் இருந்தவராவார். இவரின் வெற்றிக்கு அவரின் தனிப்பட்ட செல்வாக்கும் காரணமாகும்.
அரசுடன் கைகோர்த்துக் கொண்டு செயற்படுபவர்கள் வீடு வீடாகச் சென்று கையடக்கத் தொலைபேசி கொடுத்து வாக்குக் கேட்டனர். இவர்களுக்கு என்ன நடந்தது. விமல் வீரசிங்க அரசுக்கு பாடம் புகட்ட முற்பட்டார். இவர்களால் வெற்றி பெற முடியாது. இவர்களை மக்கள் நிராகரிக்கின்றனர். விமல் வீரவங்ச மட்டுமல்ல ஜாதிக ஹெலா உறுமயவும் தனித்து போட்டியிட்டால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஹரீன் பெர்னாந்து 50 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் எடுத்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக உதய கம்மன்பில தெரிவித்தார். இப்போது அவர் எங்கே? அவர் எப்போது அரசியலில் இருந்து ஒதுங்குவாhர்? நாம் பாற்சோறு வெட்டி பட்டாசு கொளுத்தப் பார்த்திருக்கின்றோம்.
ஊவா மாகாணத்தில் மக்கள் ஜனாதிபதிக்கு சரியான புகட்டியுள்ளனர். மக்கள் ராஜபக்ச பரம்பரையில் வாக்கு கேட்டவருக்கு 96 ஆயிரம் வாக்குள் வழங்கியுள்ளனர். ஆனால் சிறிய இளைஞனான ஹரீன் பெர்னாண்டோவுக்கு 173999 ஆயிரம் வாக்குகளை வழங்கியுள்ளனர். இது 88 சதவீதமான மெச்சத்தக்க வாக்குகளாகும். இதிலிருந்து மக்களின் தீர்ப்பைப் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
இது மகிந்தவின் தேசப்பிரேமி வெற்றியாகும். அவர் மொனராகலைக்கு 3 ஆசனங்களை வழங்கி வெற்றி பெற்றுள்hhர். அத்துடன் ஹாலிஎல பகுதியில் இன்றும் பிரச்சினை இடம்பெறுகின்றது. இதனை அரசுக்கு அடக்க முடியாதுள்ளது. மக்கள் துன்பப்படுகின்றார்கள். அத்துடன் சிரஸ தொலைக்காட்சி ஊடகவியலாளர் சந்தனவும் காயமடைந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பும் இந்நிலை தொடருமாயின் அரச பொறுப்புக்கூற வேண்டும். அரசுக்கு இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சக்தி இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. பதுளையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வாவும் டிலான் பெரேராவும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
எதிரணிக் கட்சி யாவும் வீதிக்கு இறங்கி சகல ஆணைக்குழுக்களையும் நியமிக்குமாறு போராட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் சகல ஆணைக்குழுக்களும் நியமிக்கப்படும் என்று உறுதியளித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
பதுளையில் சுமார் அநுபதாயிரம் முஸ்லிம் வாக்குகள் இருந்தும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணமாகும். பொருத்தமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை.
அரசாங்கத்தில் பக்கத்தில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று கூறுகின்றார் அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை நாம் தோற்று விட்டோம் என்று யார் கூறுகின்றனர் என்கின்றார். எமது கூட்டு கட்சிகளால் நாம் வாக்குகளை இழந்தோம் அவ்வளவு தான் என்கின்றனர். இந்த வாக்குகள் ஹக்கீமுடைய வாக்குகளா? இவற்றை தமக்கு சேர்ததுக் கொள்ள முற்படுகின்றனர். இந்த 5 ஆயிரம் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்றிருக்க வேண்டியவையாகும் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment