கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரப் புரட்சிக்கான கண்காட்சி
கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தி முழுக் கிழக்கு மாகாணத்தையும் ஒரு முதலீட்டு வலயமாக மாற்றுவதே எனது கனவாகும் என, கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இன்று (30.09.2014) அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கண்காட்சி தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்திற்கான எமது அமைச்சின் முக்கிய வேலைத்திட்டங்களில் ஒன்றாக வருடாந்த மறுமலர்ச்சி கண்காட்சியை ஏற்பாடு செய்து அதனை சிறப்பாகவும் நடாத்திவருகிறோம். கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியானது இவ்வருடம் அம்பாரை மாவட்டத்தில், சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 9,10,11 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்வருகின்ற வருடம் இக்கண்காட்சியை திருமலை மாவட்டத்தில் நடத்தவும் உத்தேசித்துள்ளோம்.
எமது அமைச்சின் கீழான ஐந்து திணைக்களங்களான விவசாயம், கால்நடை, மீன்பிடி, கிராமியக் கைத்தொழில், சுற்றுலா ஆகிய துறைகளின் ஊடாக இக்கண்காட்சியை அதன் பயனாளர்களுக்கும், மக்களுக்கும், மாணவர்களுக்கும் பெறுமதியுடையதாக கொண்டு சேர்ப்பது எமது நோக்கமாகும்.
அதாவது எமது அமைச்சின் கீழான மேற்படி துறைகள் யாவும் மக்களின் வாழ்வாதாரத் தொழில்களுடனும், கிழக்குமாகாணத்தின் பொருளாதாரத்துடனும் நேரடித் தொடர்புடையதாக இருக்கின்றன. எனவே எமக்குள்ள வளங்களைப் பயன்படுத்தி இத்துறைகள் மூலம் எமது வாழ்வாதாரங்களை எவ்வாறு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் இத்துறைகளின் உற்பத்தியிலும், நடைமுறையிலும் எத்தகைய நவீன தொழினுட்பங்களைப் பயன்படுத்தலாம் என்றும் இக்கண்காட்சி மக்களின் காலடிக்குச் சென்று பல வழிகாட்டல்களையும் விழிப்புணர்வுகளையும் வழங்கவுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
எனவே கிழக்கு மாகாணத்தை ஒரு பொருளாதார புரட்சியுடைய மாகாணமாக மாற்றுவதற்கு எமது அமைச்சின் மூலம் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாகக் கருதும் இக்கண்காட்சி மூலம் கிழக்கு மாகாண மக்கள் மாத்திரமல்லாமல் ஏனைய மாகாண மக்களும் பூரண நன்மைகளைப் பெற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில் இக்கண்காட்சியின் பெறுமதியை மக்களுக்கு நன்கு உணர்த்தி அதனை ஊடகப்படுத்த வேண்டியதும் ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், பிரதம கணக்காளர் சி.ஏ. ரகுநாதன், திட்டப் பணிப்பாளர் டாக்டர் ஆர். ஞாணசேகர், மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Before you develop East, You must hand over SLMC head office to SL Muslim community. in whic you run your private business and claiming as you are the owner.of the building. Pls dont bulshit.
ReplyDeleteFazal zaad,
ReplyDeleteநீங்க சொல்றது சரிதான் ஆனால் முஸ்லிகள் இலங்கையில் இருக்கின்றார்கள் என்பதற்கு கிழக்கு தானே உள்ளது அவங்கதான் அதை நிர்ணயிக்கும்போது இன்றைக்கு ஒரு சதத்திற்கும் பொறுமதியில்லாத முஸ்லிம்காங்கிரஸ் காரியாலயத்தை வைத்து நாம் என்ன பண்ணுவது, அது இனிமேல் கோழி வளர்ப்புக்குத்தான் லாயக்கு.
அதவிட இன்னொரு விடயம் என்னவென்றால் நம்மளைப்போன்றவர்கள்தான் இப்படி பிரித்து பார்க்கின்றோம் ஆனால் கிழக்கிலுள்ளவர்க்ள் எப்போதும் ஏனைய பிராந்தியத்திலுள்ளவரகளுக்கு ஏதாவது நடக்கும்போது அவர்கள்தான் முன்னிற்கின்றார்கள். அதை நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் நாம் மேல்மாகாணம், மத்திய மாகாணம் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு முஸ்லிம்களின் நிலை இன்று இல்லை, இப்படி பார்த்துக்கொண்டிருப்பதால்தால் நம்மை எதிரிகளாக எண்ணும் சில கூட்டத்தினருக்கு அவர்களின் சதித்திட்டங்களை சரியாக செயற்படுத்த முடிகின்றது.