ஜம்மு காஷ்மீர், வரலாற்றில் இதுவரை பார்த்திராத மழை
60 ஆண்டுக கால வரலாற்றில் இது வரை பார்த்திராத மழை - வெள்ளத்தை ஜம்மு காஷ்மீர் சந்தித்துள்ளது. 390 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை நீரில் மூழ்கியிருக்கிறது. இதுவரை 148 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மக்கள் 10 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பலர் தங்களின் உடடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தொலை தொடர்பு மின்சாரம் முழு அளவில் ஸ்தம்பித்து போய் உள்ளது. இது மீட்பு பணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. முக்கிய சாலைகள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேதம் குறித்து பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை அங்கு செல்கிறார். தனி ஹெலிகாப்டரில் இருந்தபடி சுற்றி பார்க்கிறார்.
கடந்த 5 நாட்களில் பெய்த மழையால் ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய நதிகள் அனைத்தும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ஜேலம் நதி , டால் ஏரி எப்போதும் ஊருக்குள் பாயலாம் என்ற அபாய நிலையில் இருந்து வருகிறது. ஸ்ரீநகர் முழு அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் குழுவினர் , ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பாட்னா, புனேயில் இருந்தும் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றி பார்க்கிறார் பிரதமர் : பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் சென்று பார்வையிடுகிறார். இங்கு ஏற்பட்டுள்ள சேதத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்., தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment