Header Ads



உலகிலேயே இலங்கையில் தான் முஸ்லிம்கள் சிறப்பாக வாழ்கிறார்கள் - அஸ்வர்


இலங்கையிலேயே முஸ்லிம்கள் ஏனைய நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள் என தகவல் ஊடகத்துறை அமைச்சின் ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார்.

இதனை உணர்ந்துள்ள முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகத் தெரிவித்த அவர் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைப் போஷித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

மொனராகலையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அஸ்வர் எம்.பி. தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

ஒரு நீதியரசர் ‘பாங்கு’ சொல்வதற்கு நீதிமன்றம் மூலம் தடைபோட்டார். ஜனாதிபதி அவர்கள் இலங்கை வானொலி மூலம் ஐவேளை தொழுகையை முஸ்லிம் மக்களுக்காகப் பெற்றுத் தந்தார். இன்று ஒவ்வொரு வீடுகளிலும் குக்கிராமங்களிலும் ‘பாங்கு’ கேட்கிறது.

அதனால் தான் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன. அமெரிக்கா. பிரிட்டன். நோர்வே என்று எந்த வல்லரசுகள் எதிர்த்தாலும் முஸ்லிம் தலைவர்கள் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக் கின்றார்கள்.

இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள் என்பது உலக முஸ்லிம் தலைவர்களுக்குத் தெரியும். இங்கு பள்ளிவாசல்கள் திறக்கப்படுவதும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் எவரும் மறைக்க முடியாது அவை செய்மதி மூலம் முழு உலகிற்கும் செல்கிறது.

இதனை மனதிற்கொண்டு முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும். போஷிக்க வேண்டும். ஆதரவு வழங்க வேண்டும்.

சிறு சிறு சம்பவங்கள் நடக்கலாம். எனினும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்களுடன் அந்நியோன்யமாக வாழ்ந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

4 comments:

  1. உங்கள் கருத்துக்கு நன்றி அதுமட்டுமல்ல உங்கள் உள்நோக்கமே அரசியல் மாற்றத்திற்கும். முஸ்லிம்களின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்பது தின்னம்

    ReplyDelete
  2. ஹாஜி மெளத்த பற்றியும் அல்லாஹ்வைப்பற்றியும் உமக்கு தரப்பட்ட பதவியை முஸ்லிம்களுக்காக சரியாக பயன்படுத்தினீரா என்பதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் என்று சிந்தியுங்க ஹாஜி. இவ்வளவு வயசாகியும் ஏன் இந்த சுய நலம்.

    ReplyDelete
  3. பரவாயில்லையே.. பாராளுமன்றக் கோமாளி அவ்வப்போது சில உண்மைகளையும் கூறுவார் போலிருக்கின்றது.

    ஆனால் அவரின் கூற்றில் உண்மையிருந்தாலும் அவரது நோக்கம் கபடமானது. திரு. அஸ்வர் கூறுவதில் பகுதி உண்மையுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்றுள்ள முஸ்லீம் நாடுகள் பலவற்றோடு ஒப்பிடும்போது இங்கு முஸ்லீம்கள் ஓரளவு பாதுகாப்பாகவும் நன்றாகவும்தான் இருந்து வருகின்றார்கள். ஆனால் எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்கப்போகின்றோம் என்பதை நமது அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள்.

    அதாவது "ஆண்டவனே எதிரிகளை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்... முஸ்லீம் அரசியல்வாதிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்று!" என்று நாம் இறைவனிடம் ஓலமிட்டு வேண்டும் நிலைமை வரலாம்.

    ReplyDelete
  4. வரலாற்றுக் காலம் முதல் மன்னர்களின் அவையில் அந்தரே போன்ற கேமாளிகள் இருந்துள்ளனர். இவர்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்துள்னர். அந்தரே அமைச்சர் இவ்வாறு மக்களை மகிழ்வூட்ட கோமாளித்தனமான காரிணங்களில் ஈடுபட்டு வருகின்றார்

    ReplyDelete

Powered by Blogger.