இலங்கை பெண்ணை இபோலா வைரஸ் தாக்கவில்லை - சுகாதார அமைச்சு
நுவரெலியா ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி உயிரிழந்த பெண் இபோலா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகவில்லை என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த இந்தியாவின் ஆய்வுகூடத்தினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேஷ் மாநிலத்தின் புட்டர்பத்தி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட குழுவின் அங்கத்தவரான குறித்த பெண், கடும் காய்ச்சல் காரணமாக ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தததை அடுத்து இபோலா வைரஸ் தாக்கத்திற்கு அவர் ஆளாகியிருக்க கூடும் என சந்தேகித்து குருதி மாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Post a Comment