பெண்களுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் கைது..!
இந்தியா - பிஹாரில் பெண்களுக்கு செல்போனில் அடிக்கடி ‘மிஸ்டு கால்’ கொடுத்து தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய காவல் துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு செல்போனில் அடிக்கடி ‘மிஸ்டு கால்’ கொடுத்து தொந்தரவு செய்வோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354-டி (i), (ii) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதுபோன்று தொந்தரவுக்குள்ளாகும் பெண் கள் மன அமைதியை இழப்ப தோடு, பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
தவறுதலாக ஓரிரு முறை ‘மிஸ்டு கால்’ வந்திருந்தால், அதை பொருட்படுத்தத் தேவை யில்லை. அதே சமயம் தொடர்ச் சியாக பெண்களுக்கு செல் போனில் அழைப்பு விடுத்து தொல்லை கொடுப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment