பேசும்’ ஆமைகள்
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் உள்ள ஆறுகளில் பிரமாண்ட ஆமைகள் வசித்து வருகின்றன. இந்த ஆமைகள், ‘பேசும்’ சக்தி படைத்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வித, விதமான குரல் சமிக்ஜைகளை பயன்படுத்தி வருகின்றன.
உதாரணமாக, பெண் ஆமைகள், தாங்கள் முட்டையிட்டு பொறித்த குஞ்சுகளிடம் பேசும் விதமே தனிதான். குஞ்சுகளை அழைப்பதற்கு வித்தியாசமான ஓசைகளை அந்த ஆமைகள் பயன்படுத்துகின்றன. இந்த ஓசைக்கு என்ன அர்த்தம் என்று புரியாவிட்டாலும், ஆமைகளின் குணாதிசயத்தை அறிந்து கொள்ள இது உதவும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Post a Comment