Header Ads



மாவை சேனாதிராஜாவுக்கு எமது வாழ்த்துக்கள்..!

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 06-09-2014 வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பு - தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண முஸ்லிம்கள் குறித்தும், அவர்களின் மீள்குடியேற்றம் பற்றியும் சாதக நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் ஒருவராவார். புலிகள் அயுத ரீதியாக பலம் பெற்றிருந்த காலப்பகுதயில் வடமாகாண முஸ்லிம்களுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்களில் ஒருவர் என்பதுடன், கடந்த வடமாகாண சபை தேர்தலில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும், போனஸ் ஆசனத்தை வழங்க வேண்டுமென்பதிலும் உறுதியாக நின்றவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

இன்றைய தமிழ் இனவாதிகளுக்கு மத்தியில் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய மாவை சேனாதிராஜாவுக்கு எமது வாழ்த்துக்களை வழங்குகிறோம்..!

1 comment:

  1. We wish Mavai a successful leader in bringing peace to Tamils and Muslims living in this country.

    ReplyDelete

Powered by Blogger.