Header Ads



''பஸீர் சேகுதாவூத் குறித்து, ரவூப் ஹக்கீமிடம் கேளுங்கள்''


அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் குறித்து ஏதேனும் கேட்க வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளுங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், எம்.பி.யுமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிட்டதாவது,

பதுளை தேர்தல் பிரச்சார தேர்தல் கூட்டங்களில் பஸீர் சேகுதாவூத் ஏன் பங்கேற்கவில்லை என நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். அதை நீங்கள் ரவூப் ஹக்கீமிடம்தான் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். பஸீருக்கு தேர்தல் பிரச்சார அட்டவணையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் பதுளையில் விரும்பிய இடத்திற்கும் சென்று முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவான பிரச்சாரங்களில் பங்கேற்கவும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது என கூறினார்.

அத்துடன் எதிர்வரும் மெகா தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ளும் என ஹசன் அலியிடம் ஜப்னா முஸ்லிம் வினவியபோது,

இந்த அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனினும் அதனை நிறைவேற்றவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. எனினும் பலமான தரப்புடன் கூட்டணி அமைப்பது என்பது மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமல்ல. முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கின்ற தரப்புடன் மாத்திரம் இணைவதே ஏற்புடையது. அதனை உரியவேளையில் அறிவிப்போம் என்றார்.


1 comment:

  1. திரு கசன் அலி அவர்களே, திரும்பவும் அதே சொதப்பல்......! ஏன் பசீர் சேகு தாவுத்துடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூர முடியாமல் போனது..????

    ReplyDelete

Powered by Blogger.