Header Ads



கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் எப்போது பெற்றுக்கொள்ள போகிறது..?

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எப்போது பெற்றுக் கொள்ளப் போகின்றது? என்ற கேள்வியை அசாத் சாலி எழுப்பியுள்ளார். அதிகாரத்தினை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடாத்திய ஊடகவியளாளர்களின் மாநாட்டின் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்குகின்றோம் என்றும்,அதனை எமக்கு தாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டதற்கு மறுத்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. ஆனால் முஸ்லிம்  காங்கிரசினால் தனது முதலமைச்சர் பதவியினை இன்னும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

முதல் இரண்டரை காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பின் இரண்டரை காலப்பகுதியினை இலங்கை முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைப்பதாக தீர்மானிக்கப்பட்டது, எனினும் அது இன்று வரையிலும் அமுல்படுத்தப்படவில்லை.

மேலும் 18 வது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவளித்தமை தவறானது என ரவூப் ஹக்கீம் தெரிவித்தது நகைச்சுவையாக உள்ளது.அவர் இது போன்ற தவறுகளை இதற்கு முன்னரும் பல தடவைகள் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு ஆதரவளித்துவிட்டு தற்போது தவறு என கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

சிறுபாண்மை இன மக்களின் மத ,வழிப்பாட்டு தலங்களை அடித்து உடைத்த அரசாங்கத்திற்கு தேர்தல் காலத்தில் துணைப்போக மாட்டோம்  இலங்கை முஸ்லிம் காங்கிஸ் எம்மை அழைத்த போதும் இதனை தான் தெரிவித்தோம். தேர்தல் தொடர்பில் எமது அமைப்பு யாருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்பது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்போம்.

இந்த நாட்டில் பொலிசார் தமது கடமையினை சீர்பட செய்வதில்லை, குறிப்பாக பல முறை தெரிவித்தும் அலுத்கமவில் அண்மையில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் கால் வெட்டப்பட்டதுடன் அது தொடர்பில் அதற்கு பின்னரான சம்பவங்கள் பொலிசாரின் பக்கச்கார்பான நடவடிக்கையினை வெளிபடுத்தியுள்ளது, 

இத்தகைய செயற்பாடுகளை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் அரசாங்கம் ஊவா மாகாண சபை தேர்தலில் தோல்வி தழுவும் என்பதனையும் அரசாங்கத்திற்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகுட்டுவார்கள் என்றும் நம்பப்படுகின்றது.

இலங்கையின் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எவ் முஸ்லிம்; எத்தரபினருடன் பேச்சுவார்ததை நடாத்துவது என்பது தெரியாமல் உள்ளது என்பதனை அண்மையில் கரு ஜெயசூரிய அவர்கள் முஸ்லிம் தரப்பு ஒன்றுடன் நடாத்திய பேச்சு வார்த்தை மூலம் தெரியவருகின்றது.

அரசாங்கத்தின் அனைத்து செயல்களும் தோல்வியடைந்து வருகையில், தற்போது வெளிநாட்டவரின் முதலீட்டினை பாதிக்கும் வகையில் காணிச் சட்டம் தொடர்பான திட்டம் கொண்டுவரப்படுகின்றது. இது மேலும் தேசிய பொருளாதாரத்தினை பாதிக்கும் நடவடிக்கையில் பிரதானமானது.

ஐ.நா மனித உரிமைகககள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தமது பிரியா விடயினை பெற்றுக் கொண்டமைக்கும் , புதிதாக ஐ.நா மனித உரிமைகககள் ஆணையாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ள ஜோர்தான் நாட்டின் இளவரசர் திரு.அல் வூசைன் அவர்களுக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.