தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபை - முஸ்லிம்களின் ஒத்துழைப்பு கோரும் சம்பந்தன்
தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார்.
இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபையை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் குறித்து nf வினவியபோதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது ஒருமித்து செயற்பட்டு வரும் கட்சிகள், பாராளுமன்றத்தில் கூடியது உண்மை. தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் இங்கு பேசினோம். அரசியல் தீர்வு சம்பந்தமான தற்போதய நிலமை, ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பிலான விடயங்கள், இன்றைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டில் மாத்திரம் அல்ல, சர்வதேசத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கட்சி என்ற வகையில் அதனை பலப்படுத்த வேண்டிய விஸ்தரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காக ஏனைய தமிழ் மக்களுடைய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
அத்துடன் எமது இஸ்லாமிய சகோதரர்களுடன் ஒரு தெளிவான உடன்பாட்டிற்கும் இணக்கப்பாட்டிற்கும் வர வேண்டிய ஒரு தேவையும் இருக்கிறது. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் ஒரு பேரவை அல்லது பொதுச் சபையை உருவாக்குவது தொடர்பிலும் ஆராய்ந்தோம். எல்லோரும் அதில் கலந்து கொள்ளக் கூடியவகையில் அந்தப் பொதுச் சபை அமைக்கப்பட வேண்டும். இவ்விதமான பல விடயங்களைப் பற்றி ஆராய்ந்து இந்தக் கருமங்களை தொடர்ந்தும் பேசி முன்னெடுப்தற்கு முடிவெடுத்துள்ளோம். மிகவு பிரயோசனமாக கூட்டமாக அந்தக் கூட்டம் அமைந்தது.
Post a Comment