Header Ads



நான் வீர மரணம் அடையவே விரும்புகிறேன்..!

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். 

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். 

இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இயக்கத்தில் சேருவதற்கென்றே பல வெளிநாட்டினர் ’உம்ரா’ செய்வதாக விசா பெற்று, ஈராக் மற்றும் சிரியாவுக்கு வந்து விடுவதாக கூறப்படுகின்றது. அவ்வகையில், அமெரிக்கா, பிரிட்டைன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். களாக மாறியுள்ளனர்.

இது தவிர, நூற்றுக்கணக்கான பெண்களும் இணைந்து போரிட்டு வருவதாகவும் சர்வதேச உளவு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

பிரிட்டைனுக்கு உட்பட்ட ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த அக்ஸா மஹ்மூத் என்ற 20 வயது பெண் அங்கு கதிர்வீச்சியல் துறை சார்ந்த மேற்படிப்பு படித்து வந்தார். இஸ்லாமிய தீவிரவாத கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட அக்ஸா, ஸ்காட்லாந்தில் இருந்தபடியே ஐ.எஸ்.ஐ.எஸ் வேலைக்கு ஆன்லைன் மூலம் ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பின்னர், துருக்கி வழியாக சிரியாவின் அலெப்போ நகருக்கு சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு, ஒரு குழந்தையையும் பெற்றெடுத்த அவர் பெண் ஐ.எஸ்.ஐ.எஸ்.யாக மாறிப்போனார்.

அலெப்போ நகரில் இருந்தபடி செல்போன் மெஸேஜ்கள் மூலம் தனது பெற்றோருடன் பேசிய அக்ஸா, நான் வீர மரணம் அடையவே விரும்புகிறேன். இறுதி தீர்ப்பு நாளின்போது உங்களை சந்தித்து, உங்கள் கரங்களை பிடித்து சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று முன்னர் ஒரு மெஸேஜில் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். விரைவில் பிரிட்டைனை கைப்பற்றி அந்நாட்டில் தங்களது கொடியை பறக்க விடுவார்கள். பிரிட்டைன் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ரத்தம் சிந்தப்படும் என்று தற்போது அக்ஸா மஹ்மூத் எச்சரித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயற்சிக்கும் நபர்களின் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும். மீண்டும் அவர்கள் பிரிட்டைனுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சமீபத்தில் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பு ’இந்த வாரத்தின் மிகப் பெரிய ஜோக்’ என்று சமீபத்தில் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ள அவர், ‘நான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தோடு இங்கேதான் (சிரியா) இருப்பேன். எங்கள் கொடியை பிரிட்டைனில் ஏற்றி வைக்கும் வேளையில் நான் நாடு திரும்புவேன். 

உங்கள் நாடுகள் அழிக்கப்படும், உங்கள் ரத்தம் சிந்தப்படும் என்பதை கேமரூனும், ஒபாமாவும் தெரிந்துக் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.