சீனி அமைச்சருக்கு நேர்ந்த கதி...!
தேசிய அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை நிரூபிக்கும் வேறும் ஆவணங்களின்றி வாக்களிக்கச் சென்ற சீனி கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்ன திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மஹியங்கனை தேசிய பாடசாலையில் நிறுவப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக அமைச்சர் செனவிரட்ன சென்றிருந்தார்.
அமைச்சர் செனவிரட்ன தமது நாடாளுமன்ற அடையாள அட்டையை தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார்.
எனினும், அந்த ஆவணத்தை ஆள் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து அமைச்சரை வாக்களிக்க விடாது அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பின்னர் உடனடியாக ஓர் தற்காலிக அடையாள அட்டையை தயாரித்து அதனை சமர்ப்பித்து பிற்பகல் 3.30 அளவில் அமைச்சர் வாக்களித்துள்ளார்.
இரண்டு புகைப்படங்களை எடுத்து அவற்றை கிராம உத்தியோகத்தரிடம் உறுதி செய்து கொண்டு, புகைப்படத்தை பதுளை தெரிவத்தாட்சி அதிகாரியிடம் உறுதிப்படுத்தி தற்காலிக ஆள் அடையாள ஆவணமொன்றை அமைச்சர் தயாரித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அடையாள அட்டை அமைச்சரின் கொழும்பு வீட்டில் வைத்துவிட்டு சென்றதனால் இவ்வாறு வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
Post a Comment