அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை - வாசுதேவ நாணயக்கார
மக்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை வழங்கியுள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியிலேயே அரசாங்கம் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுளளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறுமை, வறட்சி போன்ற காரணிகளை விடவும் பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை கருத்திற்கொண்டே ஊவா மாகாண மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா போன்ற கடும்போக்குவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சிறுபான்மையின மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சி சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளினால் வறிய மக்கள் இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிட்டுள்ளதாகவும், இந்த மக்கள அதிருப்தி எதிர்க்கட்சிகளுக்கு வலு சேர்க்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படாமையினால் அரசாங்க ஊழியர்களின் ஆதரவு வெகுவாக குறைவடைந்துள்ளது எனவும், இதனை தபால் மூல தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment