சிங்கள பௌத்தர்களைப் பார்த்து குரைப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும்...!
-TM-
பௌத்தர்களைப் பார்த்த குரைத்தவர்களுக்கு இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தல், நல்லதொரு பாடத்தை கற்பித்திருக்கிறது என்று பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்தர்கப் பார்த்து குரைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிறந்த மண்ணில் இன்று நாம் தேவையற்றவர்களாகி உள்ளோம். பௌத்த தர்மத்துக்கு ஏற்ப வாழும் நாடொன்று அவசியம். அந்த மாற்றத்துக்காக இந்த நாடு அணிவகுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலுள்ள அனைத்து தலைவர்களும் தங்களது வரலாற்றின் அடி, நுனியைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆனால், எமது நாட்டின் தலைவர்கள் அது தொடர்பில் வாயன் திறப்பதில்லை.
இந்த நாட்டு அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் விரக்தியடைந்துள்ளன. நாடாளுமன்றத்திலுள்ள எம்.பி.க்களில் நுற்றுக்கணக்கானோர், சாதார தரம் கூட சித்தியடையாதவர்கள். சிங்கள பௌத்தர்களைப் பார்த்து குரைப்பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று ஞானசார தேரர் மேலும் கூறினார்.
Ilankayil neethanda adimuttal sakkiliya unathu aliwu miha viraiwil
ReplyDeleteகுடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு. அது இராக்குடிகாரன் பேச்சு.. ஆனால் இந்த குடிகாரன் இரவு பகலாகவே எதையாவது லூசுத்தனமாக சொல்லிக்கொண்டே இருப்பான். உனக்கு உன் எஜமானே ஆப்பு வைப்பான் அப்போது எங்களால் காணக்கூடியதாக இருக்கும் இன்ஸா அல்லாஹ்
ReplyDelete