ஊதிப்போன உடல் - அப்ரிடி, அக்மலுக்கு அபராதம்
உடல் தகுதி இல்லாத வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களில் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அதிரடியான உத்தரவாக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. அதன்படி வீரர்களின் உடல் தகுதி சோதனையை நடத்தியது. பாகிஸ்தான் சகீத் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய 4 முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்து உள்ளது. மேலும் 4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உடல் தகுதி சோதனையை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Post a Comment