Header Ads



ஜனாதிபதி, சபாநாயகரினது பிள்ளைகளை பாதுகாப்பது ஒழுக்கங்களைப் பேண நிகரானது - மேர்வின் சில்வா


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சபாநாயகர் சமால் ராஜபக்ச ஆகியோரின் ஐந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது ஐவகை ஒழுக்கங்களைப் பேணுவதற்கு நிகரானதாகும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் மொனரல் பிரசேத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மூன்று மகன்கள், சபாநயாகரின் இரண்டு மகன்கள் ஆகியோரை மக்கள் பாதுகாக்க வேண்டும். சசிந்திர ராஜபக்ச யாருடனும் பேசுவதில்லை, சிரிப்பதில்லை, யாரையும் தொடுவதில்லை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நான் அவரை அழைத்து வருகின்றேன்.

பேசுவார், சிரிப்பார் தேவையென்றால் அழகான ஆண் மகனாக சசிந்திர உங்கள் வீடுகளில் உறங்குவார்.

ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகுவதனை எவராலும் தடுக்க முடியாது. நானும் ஒரு சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டிருந்தேன். எனது பலத்தை காண்பிக்க இவ்வாறு இணைந்து கொண்டிருந்தேன்.

எனக்குத் தெரியும் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றியீட்ட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினர் தலைமைத்துவ பதவிக்காக போட்டியிடுகின்றனர். ஜே.வி.பி. ஓர் கலாச்சாரமற்ற, வரலாறு அற்ற ஓர் கட்சியாகும் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.



1 comment:

  1. இதுவும் சிரிக்க தான்

    ,செந்தில் :: என்னைய திட்டாதீங்கனே.

    கவுண்டமணி: டேய் நான் உன்னிடம் என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?

    செந்தில் :: டியூப்லைட்னே..

    .கவுண்டமணி : எத்தனை ?

    செந்தில்: : ரெண்டுனே.

    .கவுண்டமணி :ஒன்னு இங்கே இருக்கு. இன்னொன்னு எங்கே?

    செந்தில்: அதானே இந்த போஸ்டை படிக்குது!

    ReplyDelete

Powered by Blogger.