Header Ads



பாலஸ்தீனத்திற்கான நிதியுதவியை நேரடியாக கையளித்த ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன ஜனாதிபதி மாமூட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் போது பலஸ்தீன் ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்து இருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் கூட இருந்தார்.

பாலஸ்தீன ஜனாதிபதியுடன் மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து பேசிய மகிந்த

பாலஸ்தீன மக்களுக்கான இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கை மக்களின் ஒத்துழைப்புகளை மதிப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மாமூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நியூயோர்க்கில் நேற்று மதியம் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாலஸ்தீன ஜனாதிபதி, காஸா பள்ளத்தாக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கியுள்ளார்.

அத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் விரிவாக இதன் போது கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை பாலஸ்தீனத்திற்கு வழங்க தீர்மானித்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இந்த சந்திப்பின் போது நேரடியாக அந்நாட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.