பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்ட போதிலும் தமிழ், நாசிவாத பிரிவினைவாதம் தொடர்கின்றது...!
தேர்தல்களின் போது சிங்கள பௌத்த தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஈடுபட்டுள்ளார். எதிர்வரும் தேசிய தேர்தலின் போது பத்து லட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கூட்டத்தொடர்களின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் உள்ளிட்ட நகரங்களில், சிங்கள மக்களை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தேசப்பற்றுடைய சமூகம், உள்நாட்டில் வாழ்ந்து வரும் குடும்ப உறுப்பினர்களை சரியான வழியில் நடத்தி பத்து லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் எதேச்சாதிகார விடயங்கள் அகற்றப்பட வேண்டும். தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். நீதிமன்ற, தேர்தல் மற்றும் ஊழல்களை இல்லாமல் செய்ய வலுவான ஓர் சுயாதீனப் பொறிமுறைமை அவசியமாகின்றது.
இந்த மாற்றங்களைச் செய்யாது எவராலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. எதிர்கால முக்கியமான தேர்தல்களின் போது அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்தை எடுக்கக் கூடிய சக்தியாக தேசப்பற்றுடைய சக்திகளை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் லியான் பொக்ஸின் பயங்கரவாதத்திற்கு ஆதரவான உடன்படிக்கையின் முன்னிலையில் மண்டியிட்டிருந்தனர். 1990களின் நடுப்பகுதியில் உருவான தேசப்பற்றுடைய சக்திகளே இந்த சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்தன.
பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்ட போதிலும் தமிழ், நாசிவாத பிரிவினைவாதம் இன்னும் தொடர்கின்றது.
பிரபாகரன் கொல்லப்பட்ட போதிலும் பிரபாகரனின் கனவுகளை விக்னேஸ்வரன், சுமந்திரன் போன்ற நாசிவாத பிரிவினைவாதிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் தேசிய தேர்தல்களின்போது குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல்களின் போது தமிழ்நாசிவாத சக்திகளுக்கு சாவல் விடுக்கக் கூடிய வகையில் சிங்கள தேசியவாத வாக்குப் பலத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகின்றது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
insha allah you can drean until day of judjment.you,nanasara both can dream
ReplyDeleteதற்போதுள்ள நிலைமையில் இதுபோன்ற துவேசிகளை அரசியல் கட்சிகள் சேர்த்து வைத்திருப்பதே ஆபத்துதான். இவர்களால்தான் இறு வெற்றிலை சற்று வாடிப்போயுள்ளது. என்னதான் பெளத்தர்கள் பெரும்பான்மையானாலும் அவர்கள் ஒருபோதும் தீமைக்கு உடன்பட மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.
ReplyDelete