ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால், நிச்சயமாக வழக்குத் தொடர்வேன் - சரத் சில்வா பிடிவாதம்
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் நிச்சயமாக வழக்குத் தொடர்வேன் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நவம்பர் மாதம் 19ம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவித்தால் நிச்சயமாக வழக்குத் தொடரப்படும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.
18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
எனவே மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதியினால் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் நான் காத்திருக்கின்றேன், இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.
ஏற்கனவே வழக்குக்கு தேவையான ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளதாக சரத் என் சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
Post a Comment