Header Ads



பாம்பு என்றால், நெதர்லாந்தும் நடுங்கும்..!

நெதர்லாந்தின் தென் பகுதியில் டிரிம்மெலான் என்ற நகரம் உள்ளது. இது நகராட்சி அந்தஸ்தை பெற்றது. அதன் அருகேயுள்ள பிரடா நகரில் பாம்புகள் மற்றும் முயல் போன்ற சிறிய மிருகங்களை கண்ணாடி கூண்டுகளில் வைத்து வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவ்வாறு வளர்க்கப்பட்ட கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று அங்கிருந்து தப்பியது. அது டிரிம்மெலான் நகருக்குள் புகுந்தது.

அந்த பாம்பு கடித்தால் மரணம் நிச்சயம். ஏனெனில் அது மிக கொடிய விஷம் கொண்டது. எனவே, அந்த பாம்பை பிடிக்க தீவிர ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

அதுவரை பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என இணைய தளத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்கள் வீடுகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி கொண்டு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

No comments

Powered by Blogger.