Header Ads



ஹக்கீம் - றிசாத் வியூகம் நிராகரிப்பு, பரீட்சாத்த முயற்சியும் தோல்வி - ஹசன் அலி ஒப்புதல்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, சூறா கவுன்சில் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் வழங்கிய வழிகாட்டலின் அடிப்படையிலேயே பதுளை மாவட்டத்தில் ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் இணைந்து இணைந்து தமது வேட்பாளர்களை பொது சின்னத்தில் நிறுத்தினர். இருந்தபோதும் இதனை பிரதேச முஸ்லிம்கள் நிராகரித்துவிட்டனர் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்றுமுன்னர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

பதுளை மாவட்ட மொத்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரம் ஆகும். எங்களுக்கு 6 ஆயிரம் அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன. முஸ்லிம் தரப்பில் ஒரு ஆசனம் கிடைப்பதற்கு இன்னும் 20 ஆயிரம் வாக்குகள் தேவைப்பட்டிருக்கும்.

இந்நிலையில் முஸ்லிம்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு செல்லவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெருமளவில் சென்றுள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலும், அது எத்தகைய செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழமையாக வாக்களிக்கும் முஸ்லிம்களே இம்முறையும் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.

அதேநேரம் கடந்த பதுளை மாவட்ட தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 4 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. தற்போது 5 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் அல்லது வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை.

அதேவேளை பதுளையில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து வாக்கு கேட்கும் கலாசாரம் தோல்வி கண்டுள்ளது. இதனை பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையே தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. இந்த பரீட்சாத்த முயற்சியை தொடர்வதா இல்லையா என்பதை எதிர்வரும் காலங்களில் தீர்மானிப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.

8 comments:

  1. ஹலோ..., மொக்கு தனமாக அறிக்கை விட்டு கொண்டு பூன மாதிரி கண்ணை மூடி பால் குடிக்க முனையாதீர்கள். அப்போ ரிசாத் பதியுதினால் தான் இந்த தோல்வி என்று கூற முட்படுகிரீர்களா..??

    நிட்சயமாக முஸ்லிம் காங்கிரசை மக்கள் நிராகரித்துள்ளார்கள், கட்சி மிகவும் படுமோசமாக வழிநடத்தப் படுகிறது என்பது தான் உண்மை. தலைமையில் மாற்றம் தேவை. உண்மைக்காக முஸ்லிம்களின் உரிமைக்காக உயிரை விடவும் தயாராக உள்ள தலைமை தான் எமக்கு தேவை. தற்போதைய தலைமை குறைந்த பட்சம் சிறைக்கு செல்வதற்கே பயப்படுகிறது.

    பதவிக்கும் பணத்துக்கும் அந்தஸ்துக்கும் ஆசைபடும் கும்பல்களில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாக்கப்பட வேண்டும்.

    ஹசன் அலி அவர்களே, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உங்கள் கட்சிக்கான ஒரு மாற்று கட்சி என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் கட்சியின் பாள் மக்களின் மனதை வெற்றி கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  2. குண்டு வெடித்தால் பட்டாசு வெடித்தது என்று சொல்லும் நமது தலைவர்களுக்கு எப்படி அல்லாஹ் விமோசனம் கொடுப்பான். இந்த முறை மக்கள் இவர்களின் வீர வசனங்களுக்கு ஏமாந்து போகவில்லை. இனியும் தான். எது எப்படியோ... நம்மவர்கள் 'புதிய கன்ரக்' கில் கைச்சாத்திட ரொம்ப பிசியாக இருப்பார்கள். பாவம்...!!

    ReplyDelete
  3. meeshaiyil manpadavillai!!!

    ReplyDelete
  4. மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின் பாசறையில் அரசியல் கற்ற நமது அரசியல் தீர்க்க தரிசனத்தை கண்டுகொண்டோம் இந்த ஊவா தேர்தலில் !!!

    வெற்றிலைச் சின்னத்தில் ஒர் முஸ்லிமை களமிறக்கி இருந்திருந்தால் ஊவாவில் ஒர் ஆசனத்தை முஸ்லீம்களுக்கென பெற்றிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    இவ்வாறு அனேக தவறுகளை அவ்வப்போது செய்து விடுவது பழக்கமாப்போச்சு நமக்கு...

    ஊவாவில் வெண்றுதான் என்ன செய்யப்போகிறோம் ?

    கிழக்கு மாகாண மற்றும் மேல் மாகாண தேர்தலின் பின்னர் இதுவரையில் முஸ்லீம் மக்களுக்கு (கட்சிக்கல்ல, தலைமைக்கல்ல) இதுவரை கிடைத்த ஆன பலன் என்ன ?

    கடைசியில் முஸ்லிம்களின் உரிமை அபிலாசை எல்லாம் "குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது" அதுதான் உங்களது பின்வரும் கருத்தில் தெரிகிறது.

    "கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும், அரசுடன் நாம் ஒப்பந்தம் செய்துகொண்டமை உண்மையே. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் விடயம் மட்டுமல்ல, பல விடயங்களுள்ளன. அதில் கரையோர மாவட்டக் கோரிக்கையுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் பதவியென்பதை விடவும், கரையோர மாவட்ட விடயமே முதன்மைப்படுத்தப்படவேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விடமுடியாது. - ஹசன் அலி metromirror on August 27, 2014

    "தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விடமுடியாது" என்றால் எதர்க்காக மாகாண சபை உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள போட்டியிட்டோம் ?

    வணிக அரசியல் ???

    ReplyDelete
  5. அதிகார வர்க்கத்துக்கு சேவகம் புரிபவர்களால் அடிமட்ட அப்பாவி மக்களுக்கு சேவைபுரிவது போல நடிக்க முடியுமே தவிர உண்மையாக அவ்வாறு செய்ய முடியாது. எஜமானர்கள் விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்கு போட்டியிட்டு முறைத்துக்கொண்டவர்கள் ஒருவரையொருவர் பார்த்து பற்களை இளித்து குரைப்பதைக் கைவிட்டு புன்னகைத்துக் கொண்டதற்கு சமுதாய நோக்கம் காரணமல்ல. தங்கள் இருதரப்பினதும் சலுகைகள் கைவிட்டுப்போய்விடுமே எனும் கவலைதான். அதற்காக அவசரமாய் சேர்ந்த 'புனிதக்கூட்டு' தோற்றுப்போனதில் மக்களுக்கு ஒன்றும் நட்டமில்லை.

    ஆம், குரைப்பதும் புன்னகைப்பதுமான குப்பைத்தொட்டி அரசியல் அழுக்கு மிருகங்களை அடையாளங் காணமுடிந்ததே அதுவரை இலாபம்தான்!

    ReplyDelete
  6. Jesslya unka comments super and can I talk to u if yes pls msg me 00447459771521 . Tnx

    ReplyDelete
  7. Jassliya please you photo change

    ReplyDelete
  8. இர்சாத் நிசார். என்னப்பா நீங்க அவசரப்பட்டு ஜெஸ்லியா ஜெஸ்லி என்ற போட்டொவை பார்த்து ஒரு அழகான பெண்ணென்று முடிவு செய்யவேண்டாம். அந்தப்பெயருக்கும் படத்துக்கும் பின்னால் ஒரு பொய்யான அசிங்கம் இருப்பது சிலருக்கு தெரிந்தது உமக்கும் தெரியவேண்டுமென்றால் நீரே முயற்சிக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.