Header Ads



இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் (Arsenic) விஷம்..? பேராசிரியர் உபாலி சமரஜீவ

பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் (Arsenic) விஷம் அதிகளவில் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ இதனைத் தெரிவித்துள்ளார்.

“உணவு தன்னிறைவிலும் வறுமை ஒழிப்பிலும் விவசாயத்தின் பங்களிப்பு எனும் கருப்பொருளில்  இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் நிலவும் வறட்சி, அரிசி தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால் அந்நாடுகளின் அரிசியில் ஆர்ஸனிக் விஷத்தின் செறிவு அதிகமாகும். இதனை அளவிடுவதற்கான கருவிகள் எவையும் இலங்கையில் இல்லை. உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு கிலோ அரிசியில் 200 அலகு ஆர்ஸனிக் அளவை அங்கீகரித்துள்ளது.

ஆனால் இலங்கையில் உற்பத்தியாகும் அரிசியில் கிலோவுக்கு 34 முதல் 92 அலகு ஆர்ஸனிக்கே உள்ளது.

ஆனால் பங்களாதேஷின் அரிசியில் சராசரியாக கிலோவுக்கு 340 அலகு ஆர்ஸனிக் உள்ளது. பங்களாதேஷ் மக்களில் பெரும்பகுதியினருக்கு தோல் சார்ந்த நோய்கள் மற்றும் அவர்களின் உடலில் ஆர்ஸனிக்கின் தாக்கம் உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் ஏன் அந்நாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் முடிவை எடுத்தது எனவும் சமரஜீவ கேள்வி எழுப்பினார்.

1 comment:

  1. அடி முட்டாள்களின் சிந்தனை மக்களை சீரழிக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.