சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கு 50 லட்சம் வாக்குகள் திரட்டிக்கொடுக்கப்படும்
சிங்கள பௌத்த உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஐம்பது லட்சம் வாக்குகள் திரட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 5000 விஹாரைகளைத் தெரிந்து அதன் ஊடாக பிரச்சாரம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு கிழக்கில் இந்து மற்றும் முஸ்லிம்களின் பதினைந்து லட்ச வாக்குகளும் திரட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதக் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அமைய அரச நிர்வாகத்தில் ஈடுபடும், இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக கருதும் ஓர் தலைவருக்கு பொதுபல சேனா பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கௌதம புத்தரையே தலைவராக கருதுவதாகவும் வேறு எவரையும் தலைவராக கருதுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 25287 கிராமங்கள் இருப்பதாகவும் இதில் விஹாரைகள் காணப்பட்ட போதிலும் பதிவு செய்யப்பட்ட 12000 விஹாரைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் சகல பௌத்த கொள்கைளையும் பின்பற்றும் 5000 விஹாரைகள் இருக்கக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விஹாரையிலும் 1000 சிங்கள பௌத்தரை திரட்டி, சிங்கள பௌத்த ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வாக்குகள் திரட்டப்படும் என கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை நாசமாக்கும் சக்திகள் தலை தூக்கியவண்ணம் இருக்கின்றார்கள். இவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முக்கிய கடமையாக உள்ளதை அவர் உணரும் தறுவாயின் கடைசிக்கணங்களில் இருக்கின்றார்.
ReplyDelete