Header Ads



50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான 'நதியைப்பாடும் நந்தவனங்கள்'

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா நாளை 26.9.2014- வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.

தற்போதய சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளைப் பாராட்டி இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பிரபல்யமிக்க 50 தமிழ் முஸ்லிம் கவிஞர்கள் இந்நூலில் கவிதை யாத்துள்ளனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் தேசிய சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் இதனை தொகுத்துள்ளார்.

தென்னிந்தியாவின் வாணியம்பாடி இஸ்லாமிய இஸ்லாமிய கல்லூரி  பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு.அப்துல்காதர் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ரிஸாட் பதியுத்தீன் பஸீர் சேகுதாவூத் உட்பட பல அரசியல் இலக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

பேராசிரியர் அப்துல் காதர் தலைமையில் கவியரங்கு இடம்பெறுவதுடன் நூலில் கவிதை யாத்த 50 கவிஞர்களும் பொற்கிழி மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

கலாநிதி கே.பிரேம்குமார் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் நூல் நயவுரை செய்யவுள்ளனர்.

கவிஞர்.வீ.மைக்கல் கொலின் நூலாசிரியர் அறிமுகம் செய்கிறார்.

பல்வேறு இலக்கிய கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


1 comment:

Powered by Blogger.