தமது கட்சிக்குக் கிடைத்த 45,000 வாக்குகளை, அரசு மோசடி செய்திருப்பதாக பொன்சேகா தெரிவிப்பு
ஊவா தேர்தலில் தமது கட்சிக்குக் கிடைத்த 45,000 வாக்குகளைத் திருடி அரசாங்கம் மோசடி செய்திருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தமது கட்சிக்கு எதுவித ஆசனங்களும் கிடைக்காமல் இருப்பது தொடர்பில் அரசு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக, தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பே ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஒருவரிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நாளைய தினம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment