பதுளையில் இருந்து பறித்த 3 ஆசனங்களால், உயிர் பிழைத்த அரசாங்கம்
(பழனி விஜயகுமாரின் பேஸ்புக்கிலிருந்து)
ஊவா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அரசாங்கம் மிகவும் சூட்சமமான முறையில் பதுளை மாவட்டத்தில் இருந்து 3 ஆசனங்களை சட்டத்தின் பெயரால் மொனராகலை மாவட்டத்திற்கு மாற்றிக் கொண்டமையே இன்றைய தினம் அரசாங்கத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
ஊவா தேர்தல் முடிவில் அரசாங்கம் 19 ஆசனங்களையும் ஐதேக, ஜேவிபி ஆகிய எதிர் கட்சிகள் 15 ஆசனங்களையும் வென்றுள்ளன. ஆக மேலதிக 4 ஆசனங்களால் அரசாங்கம் ஆட்சி அமைக்கிறது.
3 ஆசனங்கள் பதுளையில் இருந்து 'சட்டக்கொள்ளை' செய்யப்பட்டது என்பதை மறந்து விட முடியாது. தேர்தலின்போது இடம்பெற்ற தேர்தல் சட்ட மீறல், அரச சொத்து பாவனை, அதிகார பயன்பாடு, அடாவடி, அச்சுறுத்தல் என இன்னும் பல அநியாயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊவா தேர்தலில் வெற்றிபெற்றது ஆளும் கட்சி அல்ல எதிர்கட்சிகளான ஐதேக-ஜேவிபி, ஜக.
Post a Comment