12 முறைக்கும் மேலாக கொல்லப்பட்ட போகோஹராம் தலைவர் அபுபக்கர்
நைஜீரிய நாட்டில் செயல்பட்டு வந்த போகோஹராம் வாதிகள் அந்நாட்டில் பெண்களை கடத்தி சிறை வைத்து வருகின்றனர். அண்டை நாடான கேமரூனிலும் இவர்கள் தங்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் நைஜிரிய எல்லைப்பகுதியில் தங்களுக்கும், போகோஹராம் இயக்கத்திற்கும் இடையே நடைபெற்ற சண்டையில் அந்த இயக்கத்தின் தலைவனான அபுபக்கர் ஷெகாவ் பலியானதாக கேமரூன் ராணுவத்தினர் தெரிவித்தனர். அபுபக்கர் பலியான புகைப்படத்தையும் கேமரூன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஆனால், இச்செய்திக்கு நைஜீரிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமையன்றே அபுபக்கரை கொன்றுவிட்டதாக நைஜீரிய படை தெரிவித்து விட்டதாக அந்நாடு கூறிவருகிறது. தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்து கேமரூன் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் நைஜீரிய அரசு கூறியுள்ளது.
ஏறத்தாழ 12 முறைக்கும் மேலாக அபுபக்கர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதும் அவர் தொடர்ந்து உயிருடன் நடமாடி வருவதாகவும் நைஜீரியா தெரிவித்துள்ளது. தன்னைப் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவனை பலியாக வைத்து எதிரிகளை குழப்பும் கில்லாடியான அபுபக்கர் தற்போது பலியாகியிருப்பது உண்மை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment