முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது - யூப்ரடீஸ் நதி வற்றுகிறது (அதிர்ச்சி ரிப்போர்ட்)
யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள்..!
அல்லாஹ் அக்பர் அது இப்போது நடந்தே விட்டது....!!!
நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70% வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....!!!
நபி(ஸல்) கூறினார்கள்,'யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும்.அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம்''.என்றார்கள்.
நூல் : புகாரி 7119
வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலிய யூதர்களிடம் போரிடும் என இஞ்ஜீல்(பைபிள்) சொல்லுகிறது...!!
''ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து(யூப்ரடீஸ்) என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.(வெளிப்படுத்தின விஷேஷம்16:12)
இப்படித்தான் இனி நம் கண் முன்னே அல்லாஹ்வின் மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் ஒவ்வொன்றாக இனி நிகழும் என்பதில் ஐயமில்லை...காரணம் மறுமை நாள் மிக மிக நெருங்கி விட்டது...!!!
Izil azirchiyadaivazatku enna irukku allaahvudaya rasoolin vaarthai enraal azu poyyaahaazu...
ReplyDelete