Header Ads



காஸாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசலை தகர்த்த இஸ்ரேல்


பல நூற்றாண்டு வரலாறு கொண்ட காசாவின் ஜபலியா நகரில் இருக்கும் அல் ஒமரி பள்ளிவாசல் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதல்களால் முற்றாக சேதமடைந்துள்ளது. 

அல் ஒமரி பள்ளிவாசல் குறித்த இடத்தில் கி.பி. 647 ஆம் ஆண்டு முதல் நிலைகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் இஸ்ரேல் வான் தாக்குதலில் இந்த பள்ளிவாசல் தரைமட்டமாகியுள்ளது. இந்த பள்ளிவாசலின் முகப்பு வாயில் மற்றும் மினாரத்; மம்லூக் காலத்தைச் சேர்ந்தது. அல்லது குறைந்தது 500 ஆண் டுகள் பழைமையான தாகும்.

ஜபலியாவின் மத்திய பகுதியில் உள்ள இந்த பள்ளிவாசலை உள் @ர் மக்கள் 'பெரிய பள்ளிவாசல்' என்று அழைத்துவந்தனர். கடந்த சனிக்கிழமை காசாவில் ஐந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள் ளது. அங்கு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஹமாஸ் கட்டளைத்தளம் மற்றும் பயிற்சி முகாம் இருந்ததாகவும் இஸ்ரேல் விளக் கமளித்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை மற்றுமொரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் முஅத்தின் என்று அழைக்கப்படும் குறித்த பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பவர் கொல்லப்பட்டுள்ளார். 

கடந்த 28 தினங்களாக இஸ்ரேல் காசா மீது நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 10 பள்ளிவாசல்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. தவிர 80 பள்ளிவாசல்கள் மற்றும் இரு கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதியளவில் தகர்க்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.