Header Ads



"எமது மக்களை விடவும், எந்த உயிரும் எமக்கு பெறுமதியல்ல" - அல் கஸ்ஸாம்


இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடித்தால் அதனது அனைத்து நகரங்களும் தமது இலக்கிற்குள் உள்ளடக்கப்படும் என்று ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கஸ்ஸாம் படையணி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு கறைபடிந்த செயல் என வர்ணிக்கப்பட்டுள்ளது. "எமது மக்களை விடவும் எந்த உயிரும் எமக்கு பெறுமதியல்ல" என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

"அல் கஸ்ஸாம் மற்றும் எதிர்ப்புப் போராட்டக்காரர்களுடன் நேருக்கு நேர் மோதாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தமது படைகளுடன் தப்பியோடுகின்றனர். அதற்கு பதில் அவர்கள் வான் வழியாகவும் பீரங்கிகள் கொண்டும் எமது மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்" என்று கஸ்ஸாம் படையணி குறிப்பிட்டுள்ளது. பலஸ்தீன செய்திச் சேவையான 'சபா' இந்த செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. 

"நாம் முடியுமானவரை இஸ்ரேல் இராணுவத்தினர், தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் முகாம்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துகி றோம், ஆனால் எதிரிகள் தமது தோல்வியை மறைப்பதற்கு அப்பாவி பொதுமக்கள் இருக்கும் மையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்துகிறது" என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.