Header Ads



இனவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர் - பிரசன்னா இந்திரகுமார்

எமது நாட்டில் முஸ்லீம் இனவாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடன் சேர்த்து முஸ்லீம் மக்களையும் ஏமாற்றியதாகவே வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் காலத்திற்கு காலம் கூறி வருகின்ற வார்த்தைகள் எல்லாம் நீர் மேல் எழுதிய எழுத்துப் போலவே இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அமிர்தகழியில் ஞயிற்றுக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லீம் இனவாத அரசியல் வாதிகள் தங்கள் வாக்கு இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அரசியல் மேடையில் நாடகங்களைப் போடுகின்றார்கள்.

இந்நாட்டில் இருக்கும் முஸ்லீம் இனவாத அரசியல் தலைவர்கள் எமது வடகிழக்கு மண்ணைப் பிரித்து இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து வடக்கிற்கு என்று தனியாகவும் கிழக்கிற்கு என்று தனியாகவும் மாகாண சபைகளை அமைத்து இன்று கிழக்கு மாகாண சபையில் முஸ்லீம் முதலமைச்சர் ஒருவர் இருக்கத்தக்கதாகவும், மாகாண சபை அமைச்சுக்களில் கூடியளவு முஸ்லீம் அமைச்சர்கள் இருக்கத்தக்கதாகவும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை நாம் கைவிடமாட்டோம் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான பாரபட்சமில்லாத ஆட்சியினை மேற்கொள்வோம் என்று கூறிக்கொண்டே இதுவரை எமது மக்களுக்கு புறக்கணிப்பினை மாத்திரமே பரிசாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்களின் அரசியல் இலாபத்திற்காக முஸ்லீம் மக்களை ஏமாற்றி தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்பி ஆட்சியில் அமர்ந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு மற்றும் ஏனைய பிரதிநிதித்துவங்களை அவர்களுக்கு கொடுக்க மறுத்து தமிழர்களை புறக்கணித்து தங்கள் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லீம் சமுகத்தினருக்கு அதிகளவான வேலைவாய்ப்புகளை கொடுத்து எமது தமிழ் சமுகத்தினரை ஓரம் கட்டுகின்றனர்.

அண்மையில் ஒரு முஸ்லீம் அமைச்சர் தெரிவித்தார். இந்த மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற மாகாணம் இங்கு தமிழ் இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம், முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம், சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம். இங்கு பிரிவினை என்பது இல்லை. பாரபட்சம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இவ்வாறு நுனி நாக்கில் சமத்துவத்தைப் பேசிவிட்டு பின்னர் இவர்கள் எமது மக்களுக்கு புறக்கணிப்பினை மாத்திரமே பரிசாக வழங்குகின்றனர்.

வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் இதனைப் பிரித்தாலும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியை நடாத்தும் இவ்வாறான இனவாத முஸ்லீம் அரசியல்வாதிகள் எமது தமிழ் மக்களை பசப்பு வார்த்தைகள் கூறி ஏமாற்ற நினைக்கின்றார்கள்.

முன்பு வட கிழக்கு மாகாண சபை இருந்த போது கல்வித் திறன், இன விகிதாசாரம் என்பவற்றின் அடிப்படையிலேயே அந்தந்த சமுகங்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. ஆனால் இன்று சமப்படுத்தல் எனும் பெயரில் இன விகிதாசாரமும் இல்லை, கல்வித் திறனும் இல்லை வெறுமனே தமிழ் மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு சகோதர இனத்தவர்களுக்கே தொழில் வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படுகின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தார் இந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் அமைச்சர் இல்லாத ஒரு குறையை நிவர்த்தி செய்யும் அளவிற்கு தான் தமிழ் மக்களுக்கான சேவையை மேற்கொள்வேன் என்றார். ஆனால் தமிழர்களின் வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு இடம்பெறும் போது முதலமைச்சர் கூட மௌனம் சாதித்தவராகவே இருந்தார். இவ்வாறு தான் காலத்திற்கு காலம் இனவாத முஸ்லீம் அரசியல் வாதிகளால் விடுக்கப்படுகின்ற வார்த்தைகள் அனைத்துமே நீர் மேல் எழுதப்பட்ட எழுத்துக்களாகவே இருந்து வருகின்றன.

எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அரசியல் நோக்கத்திற்காக வருபவர்கள் பலவற்றைக் கூறுவார்கள் அதனால் நாம் எமது தாயக உணர்வை இழந்து அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பிவிடக் கூடாது. எமது சமுகத்தின் இனத்தின் தற்கால நிலைமை குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் அப்போது தான் எமது இனத்திற்கான விடிவுப் பாதையை நாம் அடைய முடியும் என்றார்.

4 comments:

  1. திரு. பிரசன்னா அவர்களே, மிக்க நன்றி நீங்கள் யார் என்று முஸ்லிம் மக்களுக்கு புரிய வைத்ததுக்கு. பிரசுரித்தமைக்கு Jaffana muslimukkum நன்றி.

    ReplyDelete
  2. Mr. . Prasanna avarhale... siru thiruththam inavaaza arasiyalvaazihal enru sollungal azatkul neengalum adanguveer... ellorum inavaazathai thoondi thaane arasiyal seyraanga.... vetrifetrazum nee keel saazi nee theendaththahaazavan ippadi eththanayyo sollikkondu pohalaam..... surungakkoorin neengal ungal samoohaththai usuppivittu arasiyal laafam thedureenga. Appo neengalum oru inavaazizaan..... muzalil karunaavidamum pillayaanidamum kelungal..... pesamaateengale vellai venukku payamo. .please prasanna avarhale oru silar seyza thavarai vaithu oru samuzaayathai kurai solvazu nallazalla.... neradiyaahave avar peyarai solli neezikelungal.... azatku jaazi maza pezamillai ....muslimgalum azai virumpuvaanga.... islaamum azai varavetkum..... azai vittu vittu oru vilayaattuppottiyil poay inavaazathai thoondum urai nihalthuvazu..... avvalavu nallazalla enpazu enazu taazhmayaana karuthu.... naan thavaraaha eluziyirundhaal markkaamal virivaaha comment eluzunga. ...

    ReplyDelete
  3. ஐயா.. ராசா....

    முசுலிம இனவாதம் என்று பேசிக்கிட்டே நீர் நல்ல இனவாதம் பேசிய அந்த சொற்பொழிவ நானும் சகிக்க முடியாம பக்கதுல இருந்து கேட்டவன்தான்...

    பொதுமக்களாக தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில எவ்வளவோ ஒட்டுறவோட ஒற்றுமையா இரிக்கிற தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில தம்பி பிரசன்னா மாதிரி உள்ள எல்லா முஸ்லிம் தமில் அரசியல் வாதிகளுமே வாக்கு பிச்சைக்காக அவன் இவன தூண்டிவிடுறதும் இவன் அவன தூண்டி விடுறதுமான ஈனப் பிழைப்பையே செய்து வாறீங்க.. அப்படியிருக்க நீங்க வந்து கதையளக்குறீங்க..

    உங்களை யெல்லாம் நம்பின காலம் மலையேறிப்போச்சுதுடா....ராசா...

    நிகழ்ச்சிக்கு வந்தமா பாராட்டிப் பேசினோமா என்று கிளம்பிக்கிட்டே இரு... அதவிடுத்து இப்படியான மட்டரகமான பேச்சுக்கள பேசி வெறுப்ப ஏற்படுத்தாத....

    முசுலிம் அரசியல் வாதி்...இருக்கட்டும்... நீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினரா வந்த பிற்பாடு உன்மேல நம்பிக்க வச்ச மக்களுக்கு உருப்படியா இதுவைரையில என்ன செய்து வச்சிருக்கீங்க என்று ஏதாவது சொல்ல முடியுமா ராசா???

    மகாலிங்கம்

    ReplyDelete

Powered by Blogger.