Header Ads



'ஜனாதிபதி பதவியில் மஹிந்த தொடர்ந்திருப்பதே, பௌத்தர்களுக்கு அனுகூலம்'

ஜனாதிபதி பதவியில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்திருப்பதே பௌத்தர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்று அஸ்கிரிய பீடத்தின் பிரதி மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அஸ்கிரிய பீடத்தின் பிரதி மகாநாயக்கர் மெதகம தம்மானந்த தேரர், ஜனாதிபதி பதவியில் மஹிந்த ராஜபக்ஷவே தொடர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது. அதனை ஒழிப்பதற்கு முயற்சிப்பது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிரான செயலாகும்.

மேலும் இப்பதவியை ரத்துச் செய்வதாக கூறும் கட்சிகள் மற்றும் நபர்கள் யார் அதிகாரத்துக்கு வந்தாலும், அதனை ரத்துச் செய்யப் போவதில்லை. அதிகாரத்துக்கு வரும்வரை தான் இந்தக் கோஷம் எல்லாம்.

தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே பொருத்தமானவர். அவரைத் தவிர இன்னொருவர் கையில் அந்த அதிகாரம் கிட்டினால் இதனை விட பயங்கரமான விளைவுகள் ஏற்படலாம்.

எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்களில் சிலதை ரத்துச் செய்து, அதனை தொடர்வதே நாட்டுக்கு நல்லது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. தற்போது தேரர்களால் நாட்டில் நடக்கும் கற்பழிப்புகளும் தீவிரவாதமும் முன்பு நடந்ததா? உங்களுக்கு இதை கட்டுப்படுத்த திராணியில்லை இதில நீங்களெல்லாம் என்னத்த மாகானாய் கர்கள் என்று ஒன்றும் புரியல எல்லாம் பொய்ய்யானதொரு உலகம்தான் அதில இவங்கட படம் அட்டுபொய்.

    ReplyDelete
  2. Appathan muslimkalai alikkamudium

    ReplyDelete

Powered by Blogger.