ஹஜ் கோட்டாக்களை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் பௌத்தசாசசன செயலாளருக்கு
(அஸ்ரப் ஏ சமத்)
இன்று(4) ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இணைந்து ஹஜ் கோட்டா சம்பந்தமான இறுதிப் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் பௌசியினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஹஜ் கோட்டா பட்டியல் நிரகரிக்கப்பட்டுளளது.
புதிய முறையிலான ஹஜ் கோட்டா பட்டியல் புள்ளியடிப்படையில் வழங்குவதற்கு பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளாருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் கிரிட்ரீயா முறையில் நாளை ஹோட்டாக்களை பகிர்ந்தளிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் கூடிய 85புள்ளியைப் பெறும் முகவர்க்கு ஆகக் கூடியது கோட்டா 51ஆகும். ஆகக்குறைந்த கோட்டா10 ஆகும்.
ஆனால் அமைச்சர் பௌசி குழுவினரால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் 20 முகவர்களுக்கு 80-55வரை ஹஜ் கூடிய கோட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் அணைவருக்கும் ஆகக்கூடிய கோட்டா முறைப்படி 51; ஹஜ் கோட்டாவை அவர்கள் பெருவார்கள்.
இன்றைய தீர்ப்பின் படி பாதிக்க்பபட்ட 70 முகவர்களுக்கும் அவர்களது புள்ளி அடிப்படையில் சிறுகச் சிறுக ஹஜ் கோட்டா அதிகரிக்கின்றது.
இங்கு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கருத்து தெரிவித்த செரண்டிப் ஹஜ் முகவர் சங்கத்தின் செயலாளர் அல்தாப், தலைவர் முஹமட் -
நாங்கள் அல்லாஹ்வின் பெயரால் சிந்திய ஒவ்வொரு வியர்வைக்கும் துஆ பரக்கத்துகளுக்கு பாதிக்கப்பட்ட 70 ஹஜ் முகவர்களுக்கு நீதி நியாயத்தை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனை 10 முகவர்கள் சேர்ந்து பெற்றுக் கொடுத்துள்ளோம். இந்த தீர்ப்பின் படி இனி வரும் காலங்களில் அநீதி நடைபெறமாட்டாது. கடந்த 4 வருடங்களாக நீதி வேண்டி நீதிமன்றம் சென்றிருந்தோம்.
இந்த நாட்டில் நீதி நியாயம் ஒன்று உண்டு அதையும் விட இறைவனின் தீர்ப்பு ஒன்று உண்டு அதனால் எங்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது. அதனால் நாங்கள் எல்லோரும் இன்று மிகவும் சந்தோசமாக உள்ளோம். என தெரிவித்தார்.
அநியாயம் அநீதி, முறைகேடுகள் ஊடாக தனது நெறுங்கியவர்களுக்கு கூடுதல் கோட்டா வழங்கிய முறையும் அவர்களது விவதாங்களும் முன்வைத்த யோசனைகள் சகலதும் உயர் நீதிமன்றத்தினால் தோறகடிக்கப்பட்டுள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 30 முகவர்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனா.; தமக்கு சரியான நியாயமான தீர்ப்பை இறைவன் வழங்கியிருக்கின்றான். அவர்கள் எல்லோரும் சந்தோசமடைகின்றோம். நாளையில் இருந்து ஹஜ் செல்பவர்கள் தத்தமது முகவர்களுடன் அது சம்பந்தமாக தொடர்புகளை மேற்கொள்ளலாம்.
அமைச்சர் பௌசியின் கீழ் கூடுதல் ஹஜ கோட்டா பெற்ற 20 முகவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இன்று இவ் வழக்கு நீதியரசர்கள் தீபவனசுந்தர, பிரியந்த ஜயமான, குகன அமுசா ஆகியோர்கள் முன்ணிலையில் பி.பகல் 2.30 மணியில் இருந்து 04.00 மணிவரை விவாதம் நடைபெற்றது.
என்.எம் ரவல்ஸ் தலைவர் முஹமத் தலைமையிலான 10 முகவர்கள் இணைந்து ஹஜ் கோட்டா பகிர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. என இவ் வழக்கினை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி ரமேஸ் டி சில்வா, தலைமையில் ஏற்கனவே இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இன்று இவ் வழக்கினை விவாதாத்தில் ரமேஸ் டி சில்வாவின் சட்டத்தரணிகள், நிசாம் காரியப்பர் சட்டத்தரணிகள், மற்றும் ஹஸ்சாலி, நஜிமுத்தீன்,ஆகியர் ஆஜராகியிருந்தனர். பிரதியமைச்சர் அப்துல் காதரும் ஆஜராகியிருந்தனர்.
அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
சரியான தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றறேன். என்னை கலந்தாலோசிக்காமல் அமைச்சர் பௌசி செய்த தவறினால் இவ்வகையாக நீதிமன்றம் ஊடக நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனத் தெரிவித்தார்.
அப்போ பெளசி சார் ஊழல் பேர்வழியா? அஊதுபில்லாஹ். உண்மையில் தெரியாது ஏதோ தலையாட்டி பொம்மைகளாக இருக்கின்றார்கள் என்று எண்ணினேன். ஆனால் விசயம் வெளிய....
ReplyDelete