Header Ads



முஸ்லிம், பௌத்த உறவை கட்டி வளர்ப்பதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   

முஸ்லிம், பௌத்த உறவை கட்டி வளர்ப்பதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பான ஒரே நாடு ஒரே மக்கள் எனும் தலைப்பிலான மும்மொழிகளிலும் அடங்கிய நூல் நற்புறவு மற்றும் புரிந்துணர்வுக்குமான தேசிய அமைப்பினால் தாய் நாட்டில் சகல இனத்தவர்களும் நற்பாய் இருக்க சமய ரீதியான ஐக்கியத்தை கட்டியெழுப்பி எல்லோரும் புரிந்துணர்வுடன் வாழும் வகையிலான ஒரே நாடு ஒரே மக்கள் எனும் ஆவனம் இன்று (05) நல்லிணக்கத்தை அறிவுறுத்தல் சம்பந்தமான தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்டது.

மேற்படி மாநாடு மன்றத்தின் இணைத்தலைவரும், சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தருமான பேராசியர் சங்கைக்குரிய அக்கமகா பண்டித்த கும்புறுகமுவே வஜிர தேரர் மற்றும் மன்றத்தின் இணைத்தலைவரும் முன்னாள் சபாநாயகரும் இஸ்லாமிய நிலையத்தின் தலைவருமான எம்.எச்.முஹம்மத் ஆகியோரின் இணைத்தலைமையில் இந்த மாநாடு இன்று பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோது ஆவனத்தின் முதற்பிரதியை நிகழ்விற்கு பிரதமத அதிதியாகக் கலந்த கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்போது ஏனைய முதற் பிரதிகளை அமைச்சர் வாசுதே நாணயக்கார, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உள்ளிட்ட மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


1 comment:

  1. Muslim bautha uravu eppozum pol nallathaan irukku ...azai nadaathukinravarhai thatti vaithaal endha pirachinayum irukkaazu....muzali annan thambiyai thalayil rendu poattal ellaam sariyaahividum.....azai seyyaamal eththanai meeting poattalum pirayosanamillai .....ellaam nadappazu police paazuhaappodu. ...paazuhaapu illaamal vandhu andha chandithanathai kaattivittu aluthgamayai vittu poyiduvaangala..munnooru per enna moovaayiram per ponaalum thirumbi pohamaataanga....gnaanasaara kootivandhazellaam...summa thiriyira pasngathaan.... azanaalazaan avar pesumpozu dhen rasthiyaadhu gehva ethi enru sonnaar... police paazuhaapu maathiram illayenru sonnaal oru rasthiyaadhu kaaranum veetukku thirubiyirukka mattarhal. ...alhamdhulillaah periyazoru azhivai allaah thaduthuvittaan....

    ReplyDelete

Powered by Blogger.