பசீர் சேகுதாவூத்தின் நூல் வெளியீட்டு நிதி, காஸா குழந்கைளுக்கு பால்மா வாங்க..!
(Tm)
அமைச்சர் பசீர் சேகுதாவூத் எழுதிய சோர்விலாச் சொல் நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி, பலஸ்தீன் காஸாவிலுள்ள குழந்கைளுக்கு பால்மா வாங்குவதற்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இந்த நூலின் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாயைக் கூட தான் எடுக்கப்போவிதல்லை எனவும் இதன் மூலம் கிடைக்கும் நிதி பலஸ்தீன் காஸாவிலுள்ள குழந்கைளுக்கு பால்மா வாங்குவதற்கு காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் பசீர் சேகதாவூத் 1991ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக சோர்விலாச் சொல் எனும் நூல் வெளிவந்துள்ளது.
இந்நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை(3) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காசா குழைந்தகளுக்கு பால்மா கிடைப்பது நல்ல விடயம். ஒரு தூய நீயத்துடன் இது செய்யப்படுமானால் அல்லாஹ் இதற்கான நட்கூலியை கொடுப்பானாக.
ReplyDeleteஆனால் இந்த புத்தகத்துக்கு இது நல்ல தொரு விளம்பரம் என்பதை மறுக்க முடியாது.