பேஸ்புக்குக்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுக்க முயன்றவர் குண்டு பாய்ந்து பலி
‘பேஸ்புக்’ பக்கத்தின் முகப்பு பக்கத்தில் தன்னை மாவீரனாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஒரு கையில் துப்பாக்கியை பிடித்தபடி, மற்றொரு கையால் தன்னைத்தானே புகைப்படம் (ஸெல்ஃபி) எடுக்க முயன்ற 21 வயது மெக்சிக்கோ வாலிபர், அதே துப்பாக்கியின் குண்டு பாய்ந்து பலியானார்.
வடக்கு மெக்சிக்கோ நகரில் உள்ள தனது அறையில் நண்பர்கள் இருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று இந்த விபரீத எண்ணம் தோன்றி, போதை தலைக்கேறிய நிலையில் ஒரு கையில் துப்பாக்கியும், மற்றொரு கையில் செல்போன் கேமராவுமாக நின்ற அவர் எதிர்பாராமல் துப்பாக்கியில் இருந்த சீறிப்பாய்ந்த குண்டுக்கு சம்பவ இடத்திலேயே பலியானதாக அவருடன் இருந்து போலீசாரிடம் பிடிபட்ட நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்கர்கள் புத்திசாலிகள் என்று அவர்கள்தான் பீத்திக்கிறார்கள், ஆனால் உண்மையில் அடி முட்டாள்களும் படிப்பறிவில்லாதவர்களும் அத்துடன் சிறிய விடயங்களில் கூட பொது அறிவில்லாதவர்களும் அதிகமாக தற்போது அமெரிக்காவில் உள்ளதாக ஒரு புதிய தகவல் கண்டேன். ஏற்றுக்கொள்வதற்கு கஸ்டமாக இருந்தாலும் இது உண்மை.
ReplyDeleteRenees irandavar americar alla avar oru Mexican. Famous for drug cartels.
ReplyDelete