Header Ads



ஷஹீதான பாலஸ்தீனர்களுக்காக ‘மறைவான ஜனாஸா' தொழுகை நடத்த வேண்டும் - ஏ. எச். எம். அஸ்வர்

கடந்த சனிக்கிழமை காஸா பரப்பில் ஸியோனிய இஸ்ரவேல் குண்டுத் தாக்குதலினால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒமர் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டதைக் கண்டித்து தகவல், ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பியும், பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படுபாதகமான தாக்குதலை முழு நாகரிக உலகமும் வன்மையாக எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும்.1967 ஆம் ஆண்டு புனித அல் அக்ஸா மஸ்ஜித் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர் உலக முஸ்லிம்களின் புனித தலமாகக் கருதப்படும் இந்த மஸ்ஜித் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதை இட்டு மேற்கத்திய வல்லரசு நாடுகளும், ஐ.நா. சபையும் மற்றும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பும் தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இன்றேல் சமாதான உலகை உருவாக்குவோமென ஐ. நா. சபையும், ஏனைய சர்வதேச அமைப்புக்களும் விடுத்துள்ள பிரகடனத்துக்கு எந்தவிதமான மதிப்பும் அர்த்தமும் இல்லாமலாகி விடும். இஸ்ரவேலர்கள் அப்பாவி பாலஸ்தீனர்களை குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் பச்சை பச்சையாகக் கொலை செய்வதைக் கண்டிக்கிறோம்.

இஸ்ரவேல் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் ஜுலை 25ஆம் திகதி பிரேரணை கொண்டு வந்து உரை நிகழ்த்தினேன். அப்போது நாகரிக உலகின் மணச்சாட்சி எங்கே ஒளிந்துகொண்டி ருக்கிறது? என்ற வினாவை எழுப்பினேன்.

இன்று வரையில் எல்லாமாக காஸாபகுதியில் 80 மஸ்ஜிதுகள் குண்டுமாரி பொழியப்பட்டு சேதப்பட்டுள்ளன.

மேலும் இரு கத்தோலிக்க தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, இந்த இஸ்ரவேல் ஸியோனிஸ வெறியாளர்களின் மனிதப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென உலகெங்கும் ஒலி எழுப்பப்பட வேண்டும்.

‘ஷஹீதா’ன பாலஸ்தீனர்களுக்காக வேண்டி நம்நாட்டிலும் சகலரும் ‘துஆ’ இறைஞ்ச வேண்டும். ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் விசேட துஆ பிரார்த்தனைகளும், (காயிபான) மறைவான ஜனாஸா தொழுகையை நடத்த வேண்டும். இவ்வாறு அஸ்வர் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அந்த தொழுகை முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்காக தொழுவது, ஆகவே முஸ்லிம்கள் அதைப்பற்றி சிந்தித்தால் நல்லது,

    ReplyDelete

Powered by Blogger.