இந்த கவிதைக்கு ஒரு தலைப்பு வையுங்கள்..!
((நன்றி - காத்தான்குடி முபா))
கொடூரமாய் ஒரு கவிதை
எழுதச் சொன்னார்கள்...
'இஸ்ரேல்' என்று எழுதினேன்...
துரோகிக்கு ஒரு
உதாரணம் கேட்டார்கள்...
'அமெரிக்கா' என்றேன்...
கண்ணீரின் வடிவத்தை
வரையச் சொன்னார்கள்...
'பாலஸ்தீனை' வரைந்து கொடுத்தேன்...
முட்டாளை
அடையாளம் காட்டு என்றார்கள்...
'அரபி'யை காட்டினேன்...
அதிகம் இரத்த தானம் செய்த
தேசம் எது என்றார்கள்...
'காஸா' என்றேன்.
பிரபஞ்ச நயவஞ்சகம் - Universal Hypocrisy
ReplyDelete