Header Ads



காசா முழுவதும் நிசப்தம்


இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் போராளிகள் இடையே கடந்த 29 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது.  மனித நேய அடிப்படையில் 3 நாள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 

உள்ளூர் நேரப்படி, காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போர் நிறுத்தத்தால் காசா நகரம் முழுவதும் நிசப்தம் நிலவுகிறது. இந்த போர் நிறுத்தத்தால் கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். போர் நிறுத்தம் தொடங்கிய நேரம் முதல் எந்த வித அத்துமீறலும் இதுவரை நடைபெறவில்லை. ஆனால் இனி வரும் நீண்ட நேரத்திற்கும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என இஸ்ரேலை தாய்நாடாக கொண்டு காசா எல்லையிலுள்ள கிப்பட்ஸ் பகுதியில் வாழும் ஓர்லி டோரன் தெரிவித்தார். 

இதற்கு முன் மூன்று அல்லது நான்கு முறை போர் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவையனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். 

1 comment:

  1. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலியத் தரப்பில் 880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு புதுத்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான “Haartez” இன் நிருபர்களில் ஒருவராகிய “ஆமூஸ் ஹாரீல்” என்பவர் தெரிவித்துள்ளார்.

    அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி கூடிய இஸ்ரேலின் அமைச்சரவைக் கூட்டத்தில் இஸ்ரேல் இதுவரை சந்தித்துள்ள இழப்புக்கள் பற்றிய ஒரு அறிக்கை வழங்கப்பட்டது. இவ்வறிக்கையில் இந்த ஒரு மாத காலப்பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படைவீரர்கள், அதிகாரிகள், தற்கொலை செய்துகொண்டவர்கள், காயப்பட்டவர்கள் போன்ற அனைவரினதும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.

    இவ்வறிக்கையில் உள்ள பிரகாரம், இதுவரை 497 வீரர்களும், 113 அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

    இது தவிர, 166 படையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இன்னும் 311 படைவீரர்கள் யுத்தத்திற்குச் செல்லாமல் இருக்க தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தகவலை குவைதில் இருந்து வெளிவரும் பிரபல் சஞ்சிகையான “அல்முஜ்தமாஹ்” தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.