''மொஹமத் தெய்ப்'' என்றால் நடுங்கும் இஸ்ரேலியர்கள்..!
இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவின் பெரும் பகுதி குப்பை மேடாக மாறியிருக்கும் நிலையிலும் அங்குள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு ஹமாஸ் ஆயுதப் பிரிவு தளபதி மொஹமத் தெய்ப் முன்மாதிரியாக இருந்து வருகிறார். ஆனால் அவர் இஸ்ரேலினால் தேடப்படும் மிக முக்கியமான நபராக உள்ளார்.
"எமக்கு அவர்தான் முன்மாதிரி" என்று குறிப்பிடுகிறார் ஹமாஸின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து வோக்கி டோக்கி ஊடே தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்த அந்த அமைப்பின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினரான 32 வயது அஹமத்;. "அவர் காசாவில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் அனைவர் மத்தியிலும் ஒரு நாயகனாக இருக்கிறார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனை ஏற்றுப் பேசிய 14 வயது யாஸின் அபு+ ரியாலா, "அவர் எமது தாய் மண்ணை பாதுகாக்க போராடுகிறார்" என்றார்.
ஆனால் மொஹமத் தெய்ப் இஸ்ரேலியரின் முதலாவது எதிரியாக உள்ளார். இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் தளபதியாக இருக்கும் தெய்ப் கடந்த மூன்று தசாப்தங்களாக இஸ்ரேலுக்கு எதிராக போராடுகிறார். இஸ்ரேலின் படுகொலை முயற்சியில் இருந்து அவர் பல முறை உயிர்தப்பியுள்ளார். இதனால் அவருக்கு "ஒன்பது உயிர்கள் கொண்ட பு+னை" என்று புனைப்பெயர் உள்ளது.
பலஸ்தீன் போராட்டக் குழுக்கள் நடத்தும் இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூலம் அதிக பயிற்சிபெற்ற போராளிகளை கொண்டு இஸ்ரேல் இராணுவத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு மொஹமத் தெய்ப் மூளையாக செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை குறிப்பிடுகிறது.
இந்த தாக்குதல்கள் மூலம் தற்போதைய மோதலில் 63 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் காசாவில் மோதல் நிறுத்தமொன்றை கொண்டுவருவதிலும் தெய்ப் தீர்க்கமாக இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.
"இராணுவ பிரிவு தலைவரான தெய்ப்பே ஹமாஸில் முடிவெடுப்பவராக இருக்கிறார். அவர் யுத்த நிறுத்தத்திற்கு எதிராக நிற்கிறார். ஏனென்றால் மோதலின் மூலம் நாளுக்கு நாள் தமது இலக்கை எட்டுவதாக அவர் நம்புகிறார்" என்று இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஓய்வுபெற்ற இராணுவ nஜனரல் கியோரோ எய்லான்ட் குறிப்பிட்டார்.
பலஸ்தீனத்தின் ஒரு வீரராக கருதப்படும் தெய்ப், ஹமாஸின் முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை தலைவர்களுள் உயிருடன் இருக்கும் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முன்னாள் மேடை நடிகராக இருந்த இவர் மாறுவேடத்தில் பலஸ்தீன மக்களுடன் கலந்து வாழ்வதில் தேர்ச்சி பெற்றவர் என கருதப்படுகிறார்.
மொஹமத் தெய்ப் தனது 50 வயதுகளில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவரை அறிந்துகொள்ளும் புகைப்படம் ஒன்றுக்கு தற்போது இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ளன. அவரது குடும்ப வாழ்வு பற்றியும் வெளியுலகுக்கு பெரிதாக தெரியாது. அத்துடன் மொஹமத் தெய்ப்பின் உண்மையான பெயரும் வெளியுலகுக்கு தெரியாது.
அவரது உண்மையான பெயர் மொஹமத் அல் மஸ்ரி என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அவர் 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சக்கர நாட்காலியின் உதவியுடனேயே நடமாடுவதாகவும் அவரது ஒரு கை மற்றும் கண் பறிபோயிருப்பதாகவும் வதந்திகள் குறிப்பிடுகின்றன.
"அவர் மிக அமைதியானவர். எளிமையாக வாழும் அவர் பொதுமக்களுடன் கலந்து மறைந்து வாழ்கிறார். மாறுபட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் பல்வேறு பெயர்களைக் கொண்டு அவர் நடமாடுகிறார்" என்று கஸ்ஸாம் படையணியை உருவாக்கிவர்களில் ஒருவரும் ஹமாஸின் முன்னாள் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான இமாத் பலூஜp குறிப்பிட்டுள்ளார். "அவரை தெரிந்த அவருடன் சூழ இருப்பவர்கள் மிகக் குறைவானோரே அதனால்தான் அவர் இன்றுவரை உயிருடன் இருக்கிறார்" என்றும் பலூஜp விபரித்தார்.
தெற்கு காசாவின் கான் யு+னிஸில் பிறந்த தெய்ப் தனது பதின்ம வயதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். பின்னர் 1980களில் சகோதரத்துவ அமைப்பின் கிளையாக ஹமாஸ் உருவாக்கப்பட்டபோது அதில் இணைந்துள்ளார். அவர் காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் 1980களில் விஞ்ஞானக்கல்வியை கற்றுள்ளார்.
1990 இல் ஹமாஸ{டன் தொடர்புபட்டதற்காக இஸ்ரேலால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட விரைவிலேயே கஸ்ஸாம் படையணியை நிறுவ தெய்ப் பங்களிப்புச் செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டு தனது ஆலோசகரான யெஹ்யா அயாi' வெடிபொருள் நிரப்பிய கைத்தொலைபேசியைக் கொண்டு இஸ்ரேல் படுகொலை செய்ததை அடுத்து கஸ்ஸாம் படையணியை விரிவாக்குவதில் தெய்ப் தீவிரம் காட்டியுள்ளார்.
கடந்த 2002 ஆம் அண்டு இரண்டாவது இன்திபாலா அல்லது பலஸ்தீன எழுச்சி உச்சத்தை எட்டியிருந்தபோது அல் கஸ்ஸாம் படையணியின் தளபதியாக இருந்த சலாஹ் 'ஹாத் கொல்லப்பட்டதை அடுத்து தெய்ப் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
Post a Comment