காஸாவில் வபாத்தான குழந்தைகளின் ஜனாஸாக்களை ஐஸ்கிரீம் ப்ரீஸரில்
பிரேதங்கள் அழுகிப் போவதை தடுக்க போதிய குளிர்சாதனப் பெட்டி வசதி இல்லாததால் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகளின் பிரேதங்களை ‘ஐஸ் கிரீம் ப்ரீஸ’ரில் வைத்து பாதுகாக்கும் அவலம் கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும் விதமாக உள்ளது.
காஸாவில் உள்ள ரஃபா நகரின் பல பகுதிகளின் மீது இஸ்ரேலின் விமானப் படையும், தரைப் படையும் நடத்திய தாக்குதலில் அந்நகரில் உள்ள நஜ்ஜார் ஆஸ்பத்திரி இடிந்து தரைமட்டமாகியது.
இதற்கிடையே, இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் பலியானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரேதங்களை அழுகிப் போகாமல் பாதுகாக்க வேறு வழியின்றி தவிக்கும் மக்கள், தாக்குதலில் பலியான பிஞ்சு குழந்தைகளின் பிரேதங்களை ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸர்’களில் வைத்து பாதுக்கும் அவலக் காட்சி நிறைந்த புகைப்படங்களை காஸாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.
Allah Kareem.
ReplyDelete