காசா மீது மீண்டும் முழு இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவிப்பு.
அங்கு சில பகுதிகளில், மனிதாபிமான அடிப்படையில் ஏழு மணி நேரத்துக்கு மோதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்திருந்த நேரம் முடிவுக்கு வந்தபிறகு, முழுத் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்போர்
நீண்டகால அடிப்படையில், தமது நாட்டின் பாதுகாப்பு எட்டப்படும்வரை, காசா மீதான நடவடிக்கைகள் தொடரும் என, அந்த மோதல் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தெரிவித்தார்.
இன்றைய பகல் நேரத்தில், வன்முறையின் அளவு சிறிது குறைந்திருந்தாலும், அகதி முகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் எட்டு வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மோதல் நிறுத்தத்தை இஸ்ரேல் குலைத்துவிட்டது என்று பாலஸ்தீனத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
காசாவின் வடபகுதியிலுள்ள அகதி முகாம் மீதே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
ஆனால் தமது பகுதிக்குள் ஆயுததாரிகள் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது.
இதேவேளை ஜெரூசலம் நகரில், மண் அள்ளும் இயந்திரம் ஒன்று பஸ் ஒன்றின் மீது மோதியதால், இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதை இஸ்ரேலிய காவல்துறையினர் ஒரு தீவிரவாதத் தக்குதல் என்று கூறியுள்ளனர்.
Post a Comment