தங்களுடைய வேலைகளை முடிக்க, இரண்டு கைகள் போதவில்லை என்று கூறுபவர்கள் மத்தியில்..!
தங்களுடைய வேலைகளை முடிக்க, இரண்டு கைகள் போதவில்லை என்று கூறுபவர்கள் மத்தியில், பிறப்பிலேயே, இரு கைகள் இல்லாமல் பிறந்தவர்கள் என்ன செய்வர்...அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும், லிண்டா பெனான் மற்றும் அவரது ஒன்பது வயது மகன் டிமி இருவருக்கும் பிறப்பிலேயே கைகள் இல்லை.
'ஹோல்ட் ஓரம் சிண்ட்ரோம்' என்னும் மரபணு நோயால் தாக்கப்பட்டுள்ள இவர்களின் எலும்புகள் கருவிலேயே வளர்ச்சி அடைவதில்லை. இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய பிரச்னைகளும் காணப்படும். ஆனால், இதற்காக தாயும், மகனும் கலங்கி விடவில்லை. தங்களுடைய கால்களையே கைகளாக நினைத்து, தங்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
Post a Comment