Header Ads



மஹிந்தவின் சிவப்பு சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என நினைத்த தென்னாபிரிக்க உப ஜனாதிபதி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.

தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தனர்.

அக்குழுவினர்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் அன்று மாலையே சந்தித்து கலந்துரையாடினர்.

அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோச இருவரும் இணைந்து இருக்கும் படம் எடுக்கப்பட்டது.

அந்த படத்தை, தென்னாபிரிக்கக் குழுவிலிருந்த பிரதிநிதியொருவர் அவசரமாக டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். tm

அதில், 'ரமபோச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது..... அவர், மிக அவசரத்தில்தான் இருக்கின்றார். தனது கழுத்துப்பட்டியை (Tie) கூட கட்டுவதற்கு அவர் மறந்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அன்னநடை நடந்து தன நடை இழந்ததாம் காகம். இங்கு சால்வையையும் காணோம் கழுத்துப் பட்டியையும் காணோம்.

    ReplyDelete
  2. அப்பாவி மக்களின் இரத்தக்கறை அதனுள்ளே மறைந்திருக்கின்றது. இதன் துர்வாடை என்றாவது ஒருநாள் குமட்டி இரத்த வாந்தி எடுக்கச் செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.